AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Thursday 29 December 2016

Mudras in Buddhism

  • Thumb. Represented by the earth element and the planet Saturn, the thumb corresponds to the organs Stomach, Spleen and mouth. It is connected to the Yi (意), or the intellect, and its energy influences our clarity.
  • Index finger. Represented by the wood element and the planet Jupiter, the index finger corresponds to the organs Liver, Gall Bladder and eyes. It connected to the Hun(魂), or the ethereal soul, and its energy influences our sensitivity.
  • Middle finger. Represented by the fire element and the planet Mars, the middle finger corresponds to the organs Heart, Small Intestine and the tongue. It connected to the Shen (神), or the aggregate soul and its energy influences our creativity.
  • Ring finger. Represented by the metal element and the planet Venus, the ring finger corresponds to the organs Lung, Large Intestine and nose. It connected to the Po (魄), or the corporeal soul and its energy influences our intuition.
  • Little finger. Represented by the water element and the planet Mercury, the little finger corresponds to the organs Kidney, Bladder and ears. It connected to the Zhi (志), or the will and its energy influences our spontaneity.

Saturday 24 December 2016

வாசி

கேள்வி 
வாசி யோகத்தில் ; இரண்டு நாசி சுவாசம் , இடது நாசி சுவாசம் வலது நாசி சுவாசம் ,  ஒருநாசியில் உள்வாங்கி மறுநாசியில் வெளியிடல்  ஆகியவை ஏன் செய்ய வேண்டும் ?
 நாடி சுத்தி 
, பிராணாயாமம் வாசி யோகம் , வித்தியாசம் என்ன . ?
பதில் 
நாடிகள் என்பது சக்தி ஓட்ட பாதைகள்.  நமது உடலில்  72000  நாடிகள் செயல் படுகிண்றன. 

இவை பத்து பிரதான நாடிகள் மூலம் கட்டு படுத்த படுகின்றன .. இந்த பத்து நாடிகளை மூன்று அதி  முக்கிய நாடிகள் கட்டுபடுத்துகின்றன .  அவை இடகலை பிங்கலை சுழிமுனை அல்லது குரு நாடி. அவற்றுள் சுழிமுனை நாடியை வாசி யோகம் மூலம் நாம் உருவாக்குகிறோம் . 

இடகலை பிங்கலை  ஆகிய நாடிகள்  நமது இடது நாசி  மற்றும் வலது நாசி துவாரம் வழி  இடதுபக்க செயல்பாடு வலது பக்க செயல் பாடு என  பிரித்து செயல்படுகின்றன .. ஆயினும்   இடகலை என்ற சந்ரகலை 16  நாத கலை சக்தி கொண்டது .   பிங்கலை என்ற  சூரிய நாடி 12 விந்து கலை சக்தி கொண்டது .இதனால் நாத உயிர்சக்தி (positive life energy) மற்றும் விந்து உயிர் சக்தி ( negative life energy )  சமநிலை அடையவில்லை.இதற்காக சுழிமுனை என்ற நாடியை வாசி யோகத்தில் உருவாக்குகிறோம் . இதில் தாரக கலை என்ற கலை சக்தி  (கிடைக்கும் )பெறும் பலம் கொண்டது . . இதனால் இடகலை பிங்கலை சமநிலை பெற்று உடல் இளமையுடன்  அழியாமல்  இருக்கும் .இந்த பிரபன்ச்சத்தில் இருந்து 32 கலை  பெறப்படுகிறது .  இந்த உயிர் சக்தி நமது உடல் முழுவதும் பரவி உடலில் உருவாகும் 64 கலை சக்தியுடன் சேர்ந்து 96 கலை சக்தி உருவாக்கும் . இது அளப்பறி சக்தி . நிலை . இதுவே அணைத்து அபூர்வ சக்திகளுக்கும்  சித்திகளுக்கும் அடிப்படை .. 
.  
சாதரணமாக நாம் இரண்டு நாசியில் சுவாசிக்கிறோம் 
அப்பொழுது நாத கலை !விந்து கலை 12 என்ற வித்தியாசத்தால் 4  கலை வீணாகிறது  இதை சமநிலை படுத்த ஒருநாசியில் சுவாசம் அடைபட்டு நிகழும் .அப்பொழுது குறைவான சக்தியே பெறப்படும் . உயர்ந்த சக்தி பெற வாசி யோகா ஆரம்பத்தில் மூச்சை நெறிப்படுத்த துவங்குகிறோம் . முதலில் காலத்தை நெறிபடுத்தி இரண்டு நாசியிலும் சுவாசித்து  வாசி உருவாக்குகிறோம்இவ்விதம் .வாசிபழகுதல்  துயர் தராது 

அதன் பின் நாடிகளை நெறிபடுத்தி வாசியோகம் பழக வேண்டும்.அதற்க்கு 

  • முதலில் இரண்டு நாசியிலும் சுவாசித்து வாசிபழகுதல் வேண்டும்.
  • அதன்  பிறகு வலது நாசியில் யில் வாசி பழக வேண்டும் 
  • அதன்பின் இடது நாசியில் வாசி பழக வேண்டும்  . 
இவை நாடிசுத்தி எனப்படும் .
  • அதன் பின்  வலது நாசியில்  உள்வாங்கி கும்பித்து  இடது வெளியிடல்  
  • அதன் பின்  இடது நாசியில்  உள்வாங்கி கும்பித்து   வலது வெளியிடல்  என வாசி பழகவேண்டும் .
  
இது பிராணயாமம்

 
இப்படி  படிப்படியாக நாசியை பயன்படுத்தி வாசி யோகம்  பழக வேண்டும் .
 அதன் பின் ஆதாரதளங்களில் பிராணாயாமம் செய்வது வாசியோகம் 
பழக வேண்டும்   .

 
இதனால்  பிரபன்ச்சத்தில் பெறும் நாத மற்றும் விந்து சக்திகள் உடலில் நாத விந்து சக்திகளை உருவாக்கி . உடலில் சக்தி சம நிலை உருவாக்கும் . இவிதம்  படிப்படியாக நாடிகளை நெறிப்படுத்தி சக்தி சமநிலை பெறுவதால் மனம் அமைதிஆகி ஒருநிலைப்படும். உடல் உறுதி பெறும் 
.

இப்படி படிப்படியாக வாசி பழகாவிட்டால்  சக்தி சமநிலை கெடும் . 
மூச்சுப்பிடிப்பு மற்றும் துன்பங்கள் வரும் .  

இவ்விதம் படிப்படியாக வாசி பழகுவதால்  உடல் முழுவதும் சக்தி ஓட்டபாதை சீராகும் . அனைத்து அவயவங்களும் சக்தி பெரும் . இதனால் நோய்கள் தீரும். துன்பம் நேராமல் சக்தி பெறுகிறோம் .

Friday 23 December 2016

Hanuman Mantra to Control the Lust

Hanuman Mantra to Control the Lust -

Lord Hanuman is a true devotee of Lord Rama. He sacrificed all his life in the service of Lord Rama. He can help you to control the excessive urge of lust from you. Below is the mantra given for self control of sexual urge.

The mantra contains the word - 'kaam' and 'dahana' which means lust and burn respectively. The meaning of this mantra is - "I bow to Lord Hanuman who burns the urge of lust from devotees". You can pray to Lord Hanuman to control the sexual urge through this mantra. This mantra is given in both English and Devanagari for pronunciation purpose. You can use the embedded mantra audio to listen it.

Om kāma dahanāahya namaha

Thursday 22 December 2016

Agastiyar

Sitthar Name : Agastiyar
Tamil Month Of Birth : Markazhi
Tamil Birth Star : Aayilyam
Duration Of Life : 4-Yugas, 48 days
Place Of Samathi : Thiruvananthapuram
Guru : Shiva
Disciples : Bhogar, Babaji, Thiruvalluvar, Machamuni.
Contributions : Medicine, Kayakalpam, Tamil Grammar, Yoga.

பதினென் சித்தர்களில் மிக பிரபலமானவர் என்றால் அது அகத்தியர்தான்.தெய்வங்களுடனும், மன்னர்களுடனும் தொடர்பு படுத்தி அறியப்படும் சித்தர் இவர். சித்த வைத்தியத்தின் பிதாமகர்களில் இவர் முதன்மையானவர்.

பழந்தமிழ் பாடல்களிலும் சரி,தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் இவர் பற்றிய பல குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. வேதகாலத்து சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அகத்தியர் போற்றப் படுகிறார். இவை போதாதென அகத்தியர் குறித்த எண்ணற்ற செவிவழி கதைகளும் வழங்கப் படுகின்றன.

இல்லறத்தில் துறவறத்தை கடைப்பிடித்தவர் அகத்தியர்.மனைவியின் பெயர் லோப முத்திரை, மகன் பெயர் சங்கரன்.

இவர் எழுதிய சமரச ஞானம் என்ற நூலில் உடம்பில் உள்ள முக்கிய நரம்பு முடிச்சுக்கள் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.அத்துடன் இவர் எழுதிய அகத்தியர் ஐந்து சாத்திரம், அகத்தியர் கிரியை நூல், அகத்தியர் அட்டமாசித்து, அகத்தியர் வைத்தியரத்னசுருக்கம், அகத்தியர் வாகட வெண்பா, அகத்தியர் வைத்திய கௌமி, வைத்திய ரத்னாகரம், வைத்தியக் கண்ணாடி, வைத்தியம் 1500, வைத்தியம் 4600, செந்தூரன் 300, மணி 400, வைத்திய சிந்தாமணி, கரிசில்பச்யம், நாடி சாஸ்திரப் பசானி, பஸ்மம்200, வைத்திய நூல்கள் பெருந்திரட்டு,சிவசாலம், சக்திசாலம், சண்முக சாலம், ஆறேழுத்து அந்தாதி, கர்மவியாபகம், விதி நூன் மூவகை காண்டம், அகத்தியர் பூஜா விதி, அகத்தியர் சூத்திரம் 30, அகத்தியர் ஞானம் என்ற நூல்கள் முக்கியமானவையாக போற்றப் படுகிறது.

இத்துடன் "அகத்தியம்" என்னும் ஐந்திலக்கணமும், அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி நூலும் இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது.

அகத்தியர் அனந்த சயனம் என்ற திருவனந்த புரத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது

Tuesday 20 December 2016

சித்தர்கள் என்பவர் யார் தொடர்ச்சி.

சித்தர்கள் என்பவர் யார் தொடர்ச்சி
.....
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.
அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள். 
சித்தர்களைத் தியானித்தால், அவர்களின் திருவருள் கிடைத்தால், அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால்… கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும்.  சராசரி மனிதனின் நிலையும், இறைநிலை நோக்கி உயரும்.
"ஆத்மா என்பது தான் என்ன? மனித உடலில் அதன் இருப்பிடம் யாது? மனிதன் ஏன் பிறந்து, இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது? தியானம் என்பது என்ன? ஏன் அதனைச் செய்ய வேண்டும்? ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள  தொடர்பு என்ன? மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது?… தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம்., கர்மவினையை வெல்வது எப்படி?.. "
- இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம், விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம்.

ஏனெனில், இந்த சித்தர்கள்… இறைவன் என்பவன் யார், அவனை அடையும் மார்க்கம் என்ன, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி, ப்ரம்மம் என்பது என்ன, இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான், உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது, உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என  பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.
சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.
உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்.
எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.

தொடரும். ........

"ஓம்" எனும் பிரணவ மந்திரத்தை வெறும்30 நிமிடங்கள் காதால் கேட்டாலே...

"ஓம்" எனும் பிரணவ மந்திரத்தை வெறும்30 நிமிடங்கள் காதால் கேட்டாலே...

உடலில் உயிர் வாயுவான ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறதாம்.

கரிமில வாயுவான கார்பன்-டை-ஆக்சைடுவின் அளவும் இரத்தத்தில் லேக்டிக் ஆசிட்டின் அளவும் குறைகிறதாம்.

கல்கத்தாவை சார்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி அன்வெஷா  அங்கே நடந்த அறிவியில் கண்காட்சியில் நிரூபித்து, விஞ்ஞானிகளை வாயடைக்க செய்துள்ளார்.

"ஓம்" எனும் மந்திரத்தை 30 நிமிடங்கள் கேட்டாலே இத்தனை பயன்கள் என்றால்..

அதை தினமும் 30 நிமிடங்கள் வெறும் வயிற்றில் உச்சரித்தால் இன்னும் எத்தனை எத்தனை பயன்கள் தருமோ?? நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்லர்.

ஓம் !! ஓம் !! ஓம் !!

Power of OM / AUM

Monday 19 December 2016

சித்த மருத்துவம்


சித்த மருத்துவம்..!

சித்த மருத்துவம் சித்தர்களால் தமிழில் தரப்பட்ட மருத்துவம் என்பதில் உலகில் யாருக்கும் மாற்றுக்கருத்துக் கிடையாது. வேற்றுமொழி பேசும் மக்கள் தம்மொழியில் மொழிபெயரத்து சித்தமருத்துவத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழர்கள் சித்த மருத்துவத்திற்கும், சித்த அறிவியலுக்கும் ஏனோ கொடுப்பது மிகக் குறைவே. 

குறிப்பாக மலையாளிகளும், சிங்களவர்களும் சித்த மருத்துவத்தையும், ஆயுர்வேதத்தையும் மிகவும் மதித்துப் போற்றுகின்றனர். அதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும், நோய் நொடியின்றியும் வாழ்வதாகத் தரவொன்று தெரிவிக்கின்றது. சித்தர்கள் மானிடர் அனைவருக்குமாக இந்த அரிய மருத்தவத்தினைத் தந்தனர். ஆனால், சித்த மருத்துவத்தின் மூலமொழியைப் பேசும் தமிழர் நாம் அந்த அறிவை இழந்து அவதிப்படுகிறோமே என்பது வேதனையான உண்மை.

சித்த நிலைக்கு உயர

ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.
மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி.  சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்?
இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே!
சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள்,

தொடரும் .......

சித்தர்கள் என்பவர்கள் யார்?.

சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.
மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.

அகத்தியர்
சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…
 தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
 தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
 தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
 தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!
என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.
அகத்தியரும்..
  மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
                              …………….
  மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே!
என்கிறார்.

Friday 16 December 2016

Lord Sun Soorya Beej Mantra

"Only  Lord Surya (Sun)in Visible God to Living & Non Living every moment. Must manifest HIS DIVINITY by Chanting Mantras."

"Benefits of  Surya Beej Mantra"

    This powerful Surya Beej mantra connects you with the higher frequencies of Lord Sun.
    This Surya Beej mantra has the power to provide you perfect health, abundance and fame.
    This Surya Beej mantra improves your eyesight and removes all diseases related to eyes.
    Divine grace of Lord Sun is surely obtained.

How to chant this Surya Beej Mantra
Start from Sunday.
Chant 6 Rosary of this Surya Beej mantra for 41 days for better results.

"Surya Beej Mantra:

"Om Hraam Hreem Hraum Sah Suryay Namah:"

"Surya Namaskar (Sun Salutation) is a form of worshiping God by meditating on the Sun, the energy provider.

"Surya Namaskar is useful in achieving concentration. Surya Namaskara is always performed in the open air, facing the Sun, at sunrise.

"Surya Namaskar is not just a physical exercise. For each of the postures, there is a particular breathing pattern to be followed. With each posture, a particular mantra - name of the Sun is chanted. Surya Namaskar Mantras or Mantras for Surya Namaskara are given below:

"Om Mitraaya Namah."
"Om Ravaye Namah."
"Om Sooryaya Namah."
"Om Bhaanave Namah."
"Om Khagaaya Namah."
"Om Pooshne Namah."
"Om Hiranya Garbhaaya Namah."
"Om Mareechaye Namah."
Om Aadityaaya Namah."
"Om Savitre Namah."
"Om Arkaaya Namah."
"Om Bhaaskaraya Namah."
"Om Sri Savitra Soorya Narayanaaya Namah."

Friday 2 December 2016

Hindu Festival 2017

*Hindu_Festivals_2017*
_Sun 8 Jan_ – *Vaikunda Ekadesi*
_Sat 14 Jan_ – *Pongal*
_Thu 9 Feb_ – *Thaipusam*
_Fri 24 Feb_ – *Maha Sivarathri*
_Sat 11 Mar_– *Maasi Maagam*
_Wed 29 Mar_ – *Ugadhi*
_5 Apr_– *Sri Rama Navami*
_Sun 9 Apr_ – *Panguni Uthiram*
_Fri 14 Apr_ -  *Tamil New Year / Vishu*
_Wed 10 May_ – *Chitra Pournami*
_Wed 7 Jun_ – *Vaikasi Visakam*
_Mon 17 Jul_ – *Aadi Begins*
_Wed 2 Aug_ – *Aadi Perukku*
_Fri 4 Aug_ – *Varalakshmi Virudham*
_Mon 14 Aug_ - *Sri Krishna Jayanti*
_Wed 16 Aug_ – *Aadi Ends*
_Fri 25 Aug_ -  *Vinayakar Chaturthi*
_Mon 4 Sep_  – *Onam*
_Sun 17 Sep_ –  *Puratasi Begins*
_Thu 21 Sep_ – *Navarathri Begins*
_Thu 28 Sep_ –  *Saraswathy Poojai*
_Tue 17 Oct_ – *Puratasi Ends*
_Wed 18 Oct_ – *Deepavali*
_Fri 20 Oct_ - *Kandha Sashti Begins*
_Wed 25 Oct_ – *Soora Samharam*
_Sat 2 Dec_ – *Thirukarthigai*
_Sat 16 Dec_ – *Margazhi Begins*
_Fri 29 Dec_ - *Vaikunda Ekadesi*