AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Thursday 30 November 2017

கணபதி மந்திரம்


கணபதி மந்திரம் ...

ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று
தாமப்பா நடனகண பதிதானொன்று
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க்கேளு
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே.
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று
நன்றான மூலகண பதிதானொன்று
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க்கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து ஓம்கிலி அங்உங்கெண்ணே

ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார். இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது "ஓம் கிலி அங் உங்"என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை பின் வருமாறு விளக்குகிறார்.

எண்ணமுடன் இடதுகையால் விபூதிவைத்து
ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி
சொன்னமொழி தவறாமற் சுழியைப்பார்த்து
சுத்தமுடன் ஓம்கிலி அங்உங்கென்று
தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத்
தான்செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால்
முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே
மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே.
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
கெடியான குன்மமுடன் காசந்தீரும்
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம்
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப்போகும்
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே.

இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான "உ" என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார்.இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.

- அகத்திய வாத சௌமியம்

சித்த ரகசியம் - “உடல் கட்டு மந்திரங்கள்”

சித்த ரகசியம் - "உடல் கட்டு மந்திரங்கள்"

நமது உடலானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனது. பஞ்சபூதங்கள் பிரபஞ்ச சக்திகளான கோள்கள், அட்டதிக்கு பாலகர்களுக்கு கட்டுப்பட்டது.பஞ்சபூதங்களின் கலவையான மனித உடல் வாழ்நாள் முழுவதும் இவற்றின் ஆதிக்கத்தில்தான் இருந்தாக வேண்டும். இந்த கட்டுப் பாடுகளை உடைத்தால் மட்டுமே எந்தவொரு மனிதரும் சிறப்பாகவும், சுயமாகவும் செயல்பட முடியும் என சித்தர்கள் நம்பினர்.இதற்கான தேடல்களும் தெளிவுகளுமே இந்த பதிவு...

பிரபஞ்ச சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து உடலை வெளியேற்றுவது, வெளியேறிய பின்னர் அந்த உடலை காப்பது என இரண்டு அம்சங்களை உள்ளடக்கியதாக "உடல் கட்டு மந்திரங்கள்" கருதப் படுகிறது.இந்த உடல் கட்டு மந்திரங்கள் பற்றி அகத்தியர் தனது அகதியர் பன்னிரு காண்டம் மற்றும் அகதியர் மாந்திரீக காவியம் என்கிற நூலில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். ஒன்பது கோள்களுக்கும் என தனித் தனியே ஒன்பது மந்திரங்களும், அட்ட திக்கு பாலகர்களுக்கென மந்திரமும் கூறப் பட்டிருக்கிறது.

இனி நவ கோள்களின் உடல் கட்டு மந்திரங்களைப் பற்றி பார்ப்போம்.ஒவ்வொரு மந்திரமாக செபித்து அதில் சித்தியடைந்த பின்னரே அடுத்த மந்திரத்தை முயற்சிக்க வேண்டும் என அகத்தியர் கூறுகிறார். அதாவது...

"பக்குவமாய் உடற்கட்டு நிவர்த்தி செய்ய
மாந்திரீக பீஜத்தை இதிலே சொன்னேன்
வகையோடே மந்திரத்தை தான் மைந்தா
தனி தனியாய் உருத்தான் போடு போடே"

- அகத்தியர் -


சூரியனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"உருவாக சித்தி செய்வாய் அருக்கன்கட்டு
உத்தமனே அம் ஹீம் என்று லட்சம்
திருவாக செபித்துவர கட்டுத்தீரும்"

- அகத்தியர் -

முதலில் சூரியன் உடல் கட்டு தீர "அம் ஹீம்" என்று லட்சம் உரு செபித்தால் சூரியன் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

சந்திரனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"ஜெயம் பெற்ர சந்திரனார் கட்டுத் தீர
அருவாக ஹீம் உறீம் என்று லட்சம்
அன்பாக செபித்துவர கட்டுத்தீரும்"

- அகத்தியர் -

ஜெயம் பெற்ற சந்திரன் கட்டு தீர "ஹீம் உறீம்" என்று லட்சம் உரு செபித்தால் சந்திரன் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

செவ்வாய்க்கான உடல் கட்டு மந்திரம்..

"நிருவாகமான செவ்வாய் கட்டுத் தீர
ஸ்ரீம் றீங் நசி மசி யென்று லட்சம் போடே"

- அகத்தியர் -

நிருவாகமான செவ்வாயின் கட்டு தீர "ஸ்ரீம் றீங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் செவ்வாயின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

புதனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"என்றுநீ புதன்கட்டுத் தீரக்கேளு
இன்பமுடன் வங் யங் நசிமசி யென்று லட்சம்
நன்றுஉருச் செபித்திடவே கட்டுத் தீரும்"

- அகத்தியர் -

புதன் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு சந்தோசமாக "வங் யங் நசி மசி" ன்று லட்சம் உரு செபித்தால் புதனின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

குருவுக்கான உடல் கட்டு மந்திரம்..

"நாட்டமுள்ள குருகட்டு தீரக் கேளு
அன்றுநீ ஸ்ரீம் றீம் நசிமசி யென்றுலட்சம்
அன்பாக செபித்தாக்கால் கட்டுத்தீரும்"

- அகத்தியர் -

நாட்டமுள்ள குருபகவான் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றீம் நசி மசி" என்று அன்பாக லட்சம் உரு செபித்தால் குருபகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

அடுத்த நான்கு கோள்களின் உடல் கட்டு மந்திரம் , சனி பகவானின் மகன் என கருதப் படும் குளிகனுக்கான உடல் கட்டு மந்திரம் மற்றும் அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரத்துடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.

பின் குறிப்பு :
இந்த பதிவுகளில் உள்ள விவரங்கள் அனைத்தும் ஒரு தகவல் பகிர்வே, மூட நம்பிக்கைகளை பரப்புவதோ அல்லது மத நம்பிக்கைகளை விதைப்பதோ எனது நோக்கமில்லை.இவற்றை மூடநம்பிக்கை, பழங்கதை என புறந்தள்ளாது ஆராயவும், விவாதிக்கவும் முற்பட்டால் ஏதேனும் தெளிவுகள் கிடைக்கலாம்.

சித்த ரகசியம் - உடல்கட்டு மந்திரங்கள்

சித்த ரகசியம் - உடல்கட்டு மந்திரங்கள் தொடர்ச்சி..
சுக்கிரனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"இன்றுநீ சுக்கிரன்தன் கட்டுக் கேளு
இறீம் றீம் நசி மசி யென்று போடே"

- அகத்தியர் -

சுக்கிர பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "இறீம் றீம் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் சுக்கிர பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.


சனிக்கான உடல் கட்டு மந்திரம்..

"போடுவாய் சனிபகவான் கட்டுக்கேளு
புகழான ஸ்ரீம் றூம் றூம் என்று சொல்லி
தேடுவாய் லட்சமுருப் போடு போடே"

- அகத்தியர் -

சனி பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றூம் றூம்" என்று லட்சம் உரு செபித்தால் சனி பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

ராகுவுக்கான உடல் கட்டு மந்திரம்..

"திறமான இராகுவுட கட்டுதீர
நாடுவாய் அரீம் ஸ்ரீம் நசி மசி என்றுலட்சம்
நலமாகச் செபித்துவரக் கட்டுத் தீரும்"

- அகத்தியர் -

திறமான இராகு பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "அரீம் ஸ்ரீம் நசி மசி" என்று லட்சம் உரு நலமாகச் செபித்தால் இராகு பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

கேதுவுக்கான உடல் கட்டு மந்திரம்..

"சாடுவாய் கேதுவுட கட்டு தீர
சரியாக அங் சிங் நசிமசி யென்றுலட்சம் போடே"

- அகத்தியர் -

கேது பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "அங் சிங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் கேது பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகதியர்.

நவ கோள்களின் மந்திரங்களுடன், சனியின் மகன் என கருதப் படும் குளிகனுக்கும் உடல் கட்டு மந்திரங்களை அகத்தியர் அருளியிருக்கிறார்.

குளிகன் உடல் கட்டு மந்திரம்..

"நீடுவாய் குளிகனுட கட்டுத்தீர்க்க
நிட்சமாய் ஓம் ஐயும் ஐயுமென லட்சம்
தீர்ந்துவிடும் நவக்கிரக உடல்கட்டப்பா"

- அகத்தியர் -

குளிகனின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "ஓம் ஐயும் ஐயும்" என்று லட்சம் உரு செபித்தால் குளிகனின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரம்.

"பாரப்பா அட்டதிக்குப் பாலகர்க்குப்
பரிவான கட்டுப் பீஜத்தைக் கேளு
சீரப்பா வீட்சணிவா வா வீரா பார் பார் என்றும்
சிறப்பாகப் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் என்றும்
கூறப்பா மங் டங் றீங் வங் வங் பங் என்றும்
குணமுடனே றீ றீ றீ றீ கிறாங் என்றும்
காரப்பா மங் ராங் ராங் வறீம் பம் வம் என்றும்
கணக்குலட்ச முருச் செபித்துப் போடே"

- அகத்தியர் -

"வீட்சணிவா வா வீரா பார் பார் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் மங் டங் றீங் வங் வங் பங் றீ றீ றீ றீ கிறாங் மங் ராங் ராங் வறீம் பம் வம்" என்று எண்ணிக்கை குறையாது லட்சம் உரு செபித்தால் சித்தியாகும். இதுவே அட்டதிக்கு பாலகர் கட்டு மந்திரமாகும் என்கிறார்.

இந்த உடல் கட்டு மந்திரங்கள் சித்தியானால் உனது உடலை கிரகசாரங்களோ, அட்டதிக்குப் பாலகர்களோ, பஞ்ச பூதங்களோ கட்டுப்படுத்த இயலாது என்று சொல்லும் அகத்தியர், மந்திரம் சித்தியான பின்னர் உனது உடல் முழுமையாக உனது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்கிறார்.

இந்த மந்திரங்களை செபிக்கும் முறைகளைப் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.

Saturday 18 November 2017

அகத்தியர் மகிரிஷி - மந்திர வாள்

அகத்தியர் மகிரிஷி - மந்திர வாள்

சகல அட்சரகளின் பெருமை

நங் நங் என்றால் நன்மைகள் உண்டாகும்அங் அங் என்றால் மண்டலத்தில் இடி விழாதுவங் வங் என்றால் உலகமெல்லாம் வசியம்வசி வசி பீடைகள் நிவாரணம்மசி மசி சகல விஷங்கள் இறங்கும்அசி அசி என்றால் அநேகமாய் பெருகிவிடும்உசி உசி  யாவும் ஒழிந்துவிடும்மசி நசி நசி மசி பேய் பிசாசுகள் ஒழிந்துவிடும்அகத்தியர் மகிரிஷி - மந்திர வாள்

1) மோகன மந்திரம் : ஓம் ரீங் மோகய! மோகய!

2. சத்ருக்கள் வசியம்--ஓம் ரீங் வசி!வசி!

3. நோய்கள் தீர---    ஓம் ரீங் நசி நசி

4) துஷ்ட மிருகம் ஓட--ஓம் ரீங் அங்

5) இகபர சித்தி--         ஓம் ரீங் சிவயவசி

6) தம்பனம் –              ஓம் ரீங் ஸ்தம்பய! ஸ்தம்பய!

7) அகர்ஷனம் –     ஓம் ரீங் ஆகர்ஸ்ய !ஆகர்ஸ்ய !

8) உச்சாடனம் நோய் கள் தீர –  ஓம் ரீங் உச்சாடய! உச்சாடய!

9) செளபாக்கியம் பெற: ஓம் ரீங் சிவசிவ!

10) தெய்வ அருள் பெற ஓம் சிவ சிவ ஓம்!

12) சத்ரு சம்ஹாரா மந்திரம்- ஓம் ரீங் மசி நசி நசி மசி

13) நெற்றிகண் மந்திரம்- ஓம் லம் சூஷ்மூநாயா நமக

மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஒரு லட்சம்தடவை உருவேற்றி ஜெபிக்க வேண்டும் மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும்   மந்திரம் நன்கு செயல்பட சைவ உணவு நன்று

Wednesday 8 November 2017

ஆயகலை-64

ஆயகலை-64 
எழுத்து இயல் கலை –[அட்சர இலக்கணம்] 
விகித கலை –[எழுத்து ஞானம்] 
கணித நூல் –[எண் கணிதம்] 
வேதம் –[முதல் நூல்] 
புராணம் –[பூர்வ கதை இதிகாசம்] 
வியாகரணம் –[இலக்கண நூல்] 
ஜோதிட சாஸ்திரம் –[வான நூல்] 
தர்ம சாஸ்திரம் –[தர்ம நூல்] 
நீதி சாஸ்திரம் –[நீதி நூல்] 
யோக சாஸ்திரம் –[யோக பயிற்சி நூல்] 
மந்திர சாஸ்திரம் –[மந்திர நூல்] 
சகுன சாஸ்திரம் –[நிமித நூல்] 
சிற்ப சாஸ்திரம் –[சிற்ப கலை] 
வைத்திய சாஸ்திரம் –[மருத்துவம்] 
உருவ சாஸ்திரம் –[உடல் கூறு இலட்சணம்] 
சப்த பிரம்மம் –[ஒலி குறி நூல்] 
காவியம் –[காபியம்-நாவல்] 
அலங்காரம் –[அணி இலக்கணம்] 
மதுர பாசனம் –[சொல் வன்மை] 
நாடகம் –[கூத்து நூல்] 
நிருத்தம் –[நடன நூல்] 
வீனை –[மதுர கான நூல்] 
வேணுகானம் –[புல்லாங்குழல் இசை] 
மிருந்தங்கம் –[மத்தள சாஸ்திரம்] 
தாளம் –[இசை நூல்] 
அஸ்திரபயிற்சி –[வில் வித்தை] 
இரச் பரிட்சை -[அதிரச சாஸ்திரம்] 
கனக பரிட்சை –[பொன் மாற்று காணும் நூல்] 
கஜ பரிட்சை –[யானை தேர்வு நூல்] 
அஸ்வ பரிட்சை –[குதிரை தேர்வு நூல்] 
இரத்தன பர்ட்சை –[நவரத்தின தேர்வு] 
பூமி பரிட்சை –[மண் அளவு தேர்வு] 
சங்கிராம இலக்கணம் –[போர் முறை] 
மல்யுத்தம் –[மற்போர் கலை] 
ஆகர் சனம் –[அழைத்தல்] 
உச்சாடனம் –[உச்சரித்தல்-அகற்றுதல்] 
வித்வேசனம் –[பகை மூட்டல்] 
மதன சாஸ்திரம் –[கொக்கோயிசம்] 
மோகனம் –[மயங்குதல்] 
வசிகீரம் –[வசிய படுத்தல்] 
ரச வாதம் –[பிற உலோகங்கலை தங்கமாக மாற்றுதல்] 
காந்தருவ வாதம் –[காந்தருவகலை பற்றிய விசயம்] 
பைபீலவாதம் –[மிருகங்கள் பாஷையில் பேசுதல்] 
கவுத்து வாதம் –[துயரத்தை இன்பமாக மாற்றும் கலை] 
தாது வாதம் –[நாடி நூல்] 
காருடம் –[மந்திரத்தால் விஷம் அகற்றுதல்] 
நஷ்ட பிரசனம் –[ஜோதிடத்தால் இழப்பை கூறுதல்] 
முட்டி சாஸ்திரம் –[ஜோதிடத்தால் மரைந்ததை கூறுதல்] 
ஆகாய பிரவேசம் –[வானில் பறத்தல்] 
ஆகாய கமனம் –[வானில் மறைந்து உலவுதல்] 
பரகாய பிரவேசம் –[கூடு விட்டு கூடு பாய்தல்] 
அதிருசியம் –[தன்னை மறைத்து கொள்ளுதல்] 
இந்திர ஜாலம் –[ஜால வித்தை] 
மகேந்திர ஜாலம் –[அதிசயம் காட்டுதல்] 
அக்னிஸ்தம்பனம் –[நெருப்பை காட்டுதல்] 
ஜல ஸ்தம்பனம் –[நீர் மேல் நடத்தல்] 
வாயு ஸ்தம்பனம் –[காற்று பிடித்தல்] 
திருஷ்டி ஸ்தம்பனம் –[கண் கட்டுதல்] 
வாக்கு ஸ்தம்பனம் –[வாயை கட்டுதல்] 
சுக்கில ஸ்தம்பனம் –[இந்திரிகத்தை கட்டுபடுத்துதல்] 
கன்ன ஸ்தம்பனம் –[மறைந்து உழவுதல்] 
கட்க ஸ்தம்பனம் –[வாள் சுழற்றுதல்] 
அவஸ்தை பிரயோகம் –[ஆன்மாவை கட்டுபடுத்துதல்] 
கீதம் –[இசை நூல்] 

Tuesday 7 November 2017

கிலியும் சிவாய நமா

கிலியும் சிவாய நமா 

Mantra for wealth and Mahalakshmi vasiyam. 

Thursday 2 November 2017

Hanuman Mantra to see HIM

Please do not missuse the mantra. There some strict rules to obey while using it. 

If you need more info, please email admin@7wealthocean.com 

Friday 18 August 2017

Panchatchara பஞ்சாட்சரமும் - 5 & 8 - Ashtatchara அஷ்டாட்சரமும்

Panchatchara பஞ்சாட்சரமும் - 5 & 8 - Ashtatchara அஷ்டாட்சரமும்
----------------------------------------------------------
பஞ்சாட்சரம் (((((ௐ))))) PANCHATCHARAM :
-----------------------------------------------------------
நங் நமசிவய நலமேதரும் நல்லோசை 
மங் மசிவயந மனத்திடம் தருமோசை
சிங் சிவயநம சீவனின் சிரசுள்ளோசை 
வங் வயநமசி சுவாசமதி னுள்ளோசை
யங் யநமசிவ யந்திரத்தி னுள்ளோசை
-கோ.நந்தகுமார்...48
---------------------------------------------------------
Transliteration : ஒலிபெயர்ப்பு 
Naṅg namasivaya nalamētarum nallōsai 
Maṅg masivayana maṉaththiṭam tharumōsai
Siṅg sivayanama jīvaṉiṉ sirasuḷḷōsai 
Vaṅg vayanamasi suvāsamati ṉuḷḷōsai
Yaṅg yanamasiva yantiratti ṉuḷḷōsai
-Kō.Nandakumār...48
----------------------------------------------------------
Translation : மொழிபெயர்ப்பு
Reciting 'Nang Namasivay' bestows well being and all prosperity
Reciting 'Mung Masivayana' strengthens and balances the mind
'Singh Sivayanama' is the Soul's inner sound at the brain centre
'Vang Vayanamasi' is the 'prana' in the in breath and out breath   
'Yang Yanamasiva' is pulsating reverberation of 6 spinal chakras 
-Dr.G.Nandakumar ... 48
----------------------------------------------------------
பஞ்சாட்சரம் (((((ௐ))))) PANCHATCHARAM :
-----------------------------------------------------------
பஞ்சாட்சரம் இருவகைப்படும்.
அவை தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம்.

'ந' காரத்தை ஆரம்பமாகக் கொண்டு அமையும் 'நம சிவாய' என்பது 'தூல பஞ்சாட்சரம்.'
அதைப் போன்று 'சி'காரத்தை ஆரம்பமாகக் கொண்டு அமையும் 'சிவாய நம' என்பது 'சூட்சும பஞ்சாட்சரம்' எனப்படும். 

தூல பஞ்சாட்சரம்மான 'நம சிவாய' என்பது பொதுவாக இகபரஇன்பங்களை வேண்டி வழிபடுபவர்களுக்கு பொருத்தமானது. இது 'சிவனுக்கு வணக்கம்' எனப் பொருள்படும். 

சரியை நெறியில் நிற்போர் தூல பஞ்சாட்சரத்தையும்,
கிரியை யோக நெறியில் நிற்போர் சூட்சும பஞ்சாட்சரமான 'சிவாய நம' என்பதையும்,
ஞானநிலையில் நிற்போர் முத்தி பஞ்சாட்சரமான 'ம'காரம் 'ந'காரம் ஆகிய இரண்டும் நீக்கிய 'சிவாய' என்ற மூன்று அட்சரங்களைக் கொண்ட 'முத்தி பஞ்சாட்சரம்'; உட்சரிப்பதற்கு உகந்தது. 

அதாவது நிருவான திக்கை பெற்றவர்கள், பஞ்சாட்சரத்தை உச்சாடணம் செய்யும் போது மூன்று முறையாக பின்பற்றுவர் அவை மானதம், மந்தம், உரை என்பனவாகும். 
இதில் வெளியில் ஒலி எழுப்பாது மனத்தினுள் தியானித்தலைக் குறிக்கும் இது உத்தம மாகும் இதனை 'மானதம்' என்பர். 
தானது காதுகளுக்கு மட்டும் கேட்கக் கூடியதாக உச்சரித்தல் 'மந்தம்' எனப்படும். 
பிறர் கேட்க்கக் கூடியதாக சத்தமாக உச்சரித்தல் 'உரை' எனப்படும்.
'மானதம' கோடி மடங்கு பலனும், 'மந்தம்' பத்தாயிரம் மடங்கு பலனும். 'உரை' யில் நூறு மடங்கு பலனும் கிடைக்கும் என ஸ்மிருதிகள் கூறுகின்றன்.

திருவைந்தெழுத்தின் பொருமையை திருமந்திரம் குறிக்கையில்
'அஞ்ந்தெழத் தாலைந்து பூதம் படைத்தனன்
அஞ்ந்தெழத் தாற்பல யோனி படைத்தனன்
அஞ்ந்தெழத் தாலிவ் வகலிடந் தாங்கினன்
அஞ்ந்தெழத் தாலே மெர்ந்துநின் றானே'
குறிப்பிடுகின்றார்.

திருவைந்தெழுத்தின் 'ம'காரத்தினால் உலக படைக்கப்பட்டது. 'ய'காரத்தால் உடலும் உயிரும் இணைந்து விளங்குகின்றது. யோனியான உயிர் நகர அடையாளத்தால் விரிந்த உலகத்தை இயைந்து யாக்கிக் காக்கும் நடுநிலைமை விளங்கும் 'சி'காரம் 'வ'கார அடையாளங்களால் எல்லாமாய் அமர்ந்தமை விளங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அஞ்தெழுத்து உலகத்தை ஆக்க வல்லது என்பது புலணாகும்.

அஞ்செழுத்து பந்தத்திலிருந்து விடுலையளிக்கும் என்பதை
'வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவர்ற்குச்
சார்ந்த வினைத்துயார் போகத் தலைவனும்' 
போந்திடும் என்னும் புரிசடை யோனே'

திருவருட் துணையால் திருவைந்தெழுத்தை முறையாக ஒதுவதனால் உலகியல் நுகர்வுடன் அதன் கண் தொடக்கின்றி வாழ்தலுமாகும். புறவிப் பெருந்துயர் நீங்கத் தம் முதல் முருவுமாய் வந்தருலுவான். புரிகடையோன் என்னும் போது புரி சடையோன் என்பது திருவாதிரை நாளை விரும்புபவன் என்றும் ஒன்றாய் வேறாய் உடனாய் விரும்பி உறையும் பண்பினேன். என்பது பொருள்.

திருவைந்தெழுத்தால் எல்லாவுலகமும் ஒழுங்காக நடைபெறுகின்றது. என்பதை
'ஐந்தின் பெருமையே அகலிட மாவது
ஐந்தின் பெருமையே ஆலய மாவது
ஐந்தின் பெருமையே யறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனு மாமே'

திருவைந் தெழுத்தின் சிறந்த திருக்குறிப்பே திருக்கோயிலாகும். அதில் 'சி'காரம்; சிவலிங்கமாகும். 'வ'காரம் அடுத்த மண்டபமாகிய மனோன்மணி நிலை. ஆனேற்று நிலை 'ய'காரம். அம்பலவாணர் நிலை 'ந'காரம். பலிபீடம் 'ம'காரம் அவ்வாறு பெருமை பெற்றது திருவைந் தெழுத்து.

ஓர்எழுத்தான ஓமிலிருந்து பஞ்சபூதங்களானான் ஐந்தெழுத்தில் என்பதை திருமந்திரம்
'வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும்
நீரேழுத் தாயநில ந்தங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய்அங்கி யாயுயி ராமெழுத்து
ஓரெழுத் தீசனும் ஒண்சுட ராமே'
விண் 'வ'காரமாயும்
நீர் 'ம' காரமாயும்
நிலம் 'ந' காரமாயும்
தீ 'சி' காரமாயும்
காற்றாகி உயிரெழுந்து 'ய' காரமாயும் உள்ளவன் சிவன் 'வமநசிய' என்பதில் அடங்கும்.

திருவைந்தெழுத்தல் 'ந'காரமே உலகை உருவாக்கும் என்கின்றது திருமந்திரம்
'நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே' 

உலகம் அடங்கி அதன் ஆணைப்படி நடக்கும் 'நமசிவாய' என ஓதுவார்க்கு நன்நெறி செல்லும் வெல்வர்களாவர்.
'அகாரம் உயிரே உகாரம் பரமெ
முகாரம் மலமாய் வருமுப் பதத்திற்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்
யகாரம் உயிரென் றறையலு மாமே'
உயிரெனக் குறிக்கும் உடல் மெய் இருபத்திநான்கும் அகாரமாகும்.
புரமென குறித்து உணர்ந்து மெய் ஐந்தும் உகாரம் மாகும்.
முலமெனக் கூறிய உணர்வு மெய் ஏழும் மகாரமாகும்.
இம் முப்பத்தாறும் மெய்களுள் சிகாரம் கிவமாய் உயிருக்குயிராய் வகாரம் சிவனின் திருமேனியாய் யகாரம் திருவருளாகும். ஏனக் குறிப்பிட்டுள்ளார்.

'நகார மகார சிகார நடுவாய்
வகாரம இரண்டும் வளியுடன் கூடி
ஒகார முதற்கொண்டு டொருகால் உரைக்க
மகார முதல்வன் மனத்கத் தானே'
நமசிவாய என்பதில் சிகாரம் நடு இரண்டு வளி என்பது இடபால் வலபால் மூச்சு என உயிர் அடையாளமான யகாரத்தைக் குறிக்கின்றது.
ஓம் எனும் மந்திரத்துடன் சேர்த்து நமசிவாய மந்திரத்தை ஓம் நமசிவாய என ஓத சிவப்பரம் பொருள் நெஞ்சகத்தே கோயில் கொள்வான் என்கின்றது திருமந்திரம்.

சிவபெருமானின் மந்திரவுருவை கூறுகையில்
'சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்
சிவாயவொ டவ்வே சிவனுரு வாகுமஞ்
சிவாயவொ டவ்வுந் தெளியவல் லார்கள்
சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே'
'சிவய' என்பதுடன் முதலாக 'சிவ' என்பதைச் சேர்த்து 'சிவயசிவ' என்பதே சிவபெருமானின் மந்திரவுருவாகும்.

சிவ மந்திரமும்-பலன்களும்

நங்சிவயநம என்று உச்சரிக்க - திருமணம் நிறைவேறும்
அங்சிவயநம என்று உச்சரிக்க - தேகநோய் நீங்கும்
வங்சிவயநம என்று உச்சரிக்க - யோகசித்திகள் பெறலாம்.
அங்சிவயநம என்று உச்சரிக்க - ஆயுள் வளரும், விருத்தியாகம்.
ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
கிலி நமசிவய என்று உச்சரிக்க - வசிய சக்தி வந்தடையும்
ஹிரீநமசிவய என்று உச்சரிக்க - விரும்பியது நிறைவேறும்
ஐயும் நமசிவய என்று உச்சரிக்க - புத்தி வித்தை மேம்படும்.
நம சிவய என்று உச்சரிக்க - பேரருள், அமுதம் கிட்டும்.
உங்யுநமசிவய என்று உச்சரிக்க - வியாதிகள் விலகும்.
கிலியுநமசிவய என்று உச்சரிக்க - நாடியது சித்திக்கும்
சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க - கடன்கள் தீரும்.
நமசிவயவங் என்று உச்சரிக்க - பூமி கிடைக்கும்.
சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க -சந்தான பாக்யம் ஏற்படும்.
சிங்றீங் என்று உச்சரிக்க - வேதானந்த ஞானியாவார் உங்றீம்
சிவயநம என்று உச்சரிக்க - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
அங்நங் சிவாய என்று உச்சரிக்க - தேக வளம் ஏற்படும்.
அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க - சிவன் தரிசனம் காணலாம்.
ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - காலனை வெல்லலாம்.
லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க - தானிய விளைச்சல் மேம்படும்.
ஓம் நமசிவய என்று உச்சரிக்க - வாணிபங்கள் மேன்மையுறும்
ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க - வாழ்வு உயரும், வளம் பெருகும்.
ஓம் ஸ்ரீறியும் சிவயநம என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம்.
ஓம் நமசிவய என்று உச்சரிக்க - சிரரோகம் நீங்கும்.
ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க - அக்னி குளிர்ச்சியைத் தரும்.

சிவ தீட்சை

அகத்தியர் அருளிய முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகளில் முதல் எட்டு தீட்சைகளைப் பற்றி காண்போம்.

தீட்சைகளில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான். இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

"தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான்
ஸ்ரீம் அம் ஓம் யென் றுலட்சம் ஜெபித்துவோதக்
காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும்
கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு
ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு
ஆம் ஓம் ஹரீம் ரீம் யென்று நீயும்
மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத
முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே."

"ஸ்ரீம் அம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர்.

"ஆம் ஓம் ஹரீம் ரீம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார் அகத்தியர்.

"சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு
செப்புவேன் குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம் யென்று லட்சம்
பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும்
பாணுவைப்போற் தேகமெல்லாம் ஒளியுமாகும்
துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு
துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று
முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி
 மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே."

"குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.

"ஸ்ரீங் அங் உங்" என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார் அகத்தியர்.

"பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு
பண்பாக யங் வங் றீங் றுந்தான்
துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி
தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும்
அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு
அன்புடனே சங் ரங் உம் ஆம் என்றுலட்சம்
குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும்
குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே."

"யங் வங் றீங்" என்று லட்சம் முறைசெபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார்.

"சங் ரங் உம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

"தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும்
சந்தோஸ மாய்ஓது இங் ரங் அவ்வு மென்றுலட்சம்
மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார்
வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள்
நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளு
நன்றாக மங் றீங் ரா ரா வென் றுலட்சம்
ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து
அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே."

"இங் ரங் அவ்வு" லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார் அகத்தியர்.

"மங் றீங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும்.அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார் அகத்தியர்.

சிவ மந்திரங்கள் 

ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.
ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.
ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும். துஷ்ட தேவதைகள் அழியும். மன்னர்கள் அருள் கிடைக்கும்.
ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும். ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.
சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும். மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.
இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.
சிங் சிங் சிவாய ஓம் எனஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.
லீங்க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:
மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-
அகத்திய மகரிஷி சிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-

நந்தீசர் மகரிஷி ோதிடம்  

சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.
துங் நமசிவாய என்று உச்சரிக்க - வித்துவான் ஆகலாம்.
ஓங் கங்சிவய என்று உச்சரிக்க - சக்தி அருள் உண்டாம்.
ஓம் சிங்சிவாய  நம என்று உச்சரிக்க - நினைப்பது நடக்கும்.
ஓம் பங்சிவாய நம என்று உச்சரிக்க - தடைகள் நீக்கும்.
ஓம் யங்சிவாய நம என்று உச்சரிக்க - துன்பங்கள் விலகும். ஓம் மாங்நமசிவாய என்று உச்சரிக்க - செல்வம் செழித்தோங்கும்.
ஓம் மங்சிவாயநம என்று உச்சரிக்க- கவலைகள் வற்றும் கெங்ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - வசிய சக்தி மிகும்
ஓம் மங்யங் சிவாய என்று உச்சரிக்க - விஷங்கள் இறங்கும். அங் ரங்ஓம்சிவாய என்று உச்சரிக்க - சாதனை படைக்கலாம். ஓங் அங் சிங் சிவாயநம என்று உச்சரிக்க - சப்த கன்னியர் தரிசனம்.
ஓங் வங்சிங் சிவாயநம என்று உச்சரிக்க - முக்குணத்தையும் வெல்லலாம்.
ஹிரீம் நமசிவாய என்று உச்சரிக்க- அரிய பேறுகள் கிடைக்கும்.
ஐயுஞ் சிவாயநம என்று உச்சரிக்க - ஆறு சாஸ்திரம் அறியலாம்.
வங்சிங் ஓம்சிவாயா என்று உச்சரிக்க - தேவர்கள் தரிசனம் காணலாம்.
சங் சிவய நம என்று உச்சரிக்க - விஷ பாதிப்பு நீக்கும்.
ஓம் துங்சிவாய நம என்று உச்சரிக்க - முத்தொழிலும் சிறக்கும்.
ஸ்ரீலம்ஹரீம் ஓம் நமசிவாய என்று உச்சரிக்க- பெரியபூமிகள் கொடுக்கும்.
சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.
வங் சிவய நம என்று உச்சரிக்க - மழை நனைக்காது.
சிவாய ஓம்ஸ்ரீ என்று உச்சரிக்க - மழை நிற்கும்.
கலியுங் சிவாய என்று உச்சரிக்க - வெள்ளம் பெருக்கெடுக்கும்.
 ஓம் கங்சிவ்வுங்சிவய என்று உச்சரிக்க - பெரியகாரியங்களில் வெற்றி.
சங்யவ் சி மந என்று உச்சரிக்க - தண்ணீரில் நடக்கலாம்.
மங் நங் சிங் சிவய என்று உச்சரிக்க - பிசாசு, பேய் சரணம் செய்யும்.

சிவன்மந்திர உச்சாடணங்கள்

மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.
 அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள்.
 எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.
 இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்தமந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.

பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம்.

இனி மந்திரங்கள்....

தத்புருஷ மந்திரம் ... கருவூரார்

இதன் மூல மந்திரம் 'நமசிவாய'.
இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும்.

"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.
"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.
"அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.
"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.
"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.

அகோர மந்திரம்

இதன் மூல மந்திரம் "நமசிவ",

"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்கஜீவனில் சிவத்தைக் காணலாம்.
"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.
"வசாலல சால்ல சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.
"சரனையச் சிவாய நம" என உச்சரிக்கவானில் பறக்கலாமாம்.
"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.
"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்

வாமதேவ மந்திரம்

"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.
"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.
"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.
"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.

சத்யோசாத மந்திரங்கள்

"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.
"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.
"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்

ஈசான மந்திரங்கள்

"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.
"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.
"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.
"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.
"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.

1 - சிவ அடையாளங்கள்
2 - சிவ தாண்டவம்
3 - Siva Thandavam 
4 - நடராஜர் Nataraja  
(அரு உரு தத்துவம் -^- Theory of Creation)

Physic power

Wednesday 9 August 2017

அனுமார் மூல மந்திரம்..


ஓம் ராஜ மூர்த்த வாயுபுத்ரா. ஹா. ரீம்
அனுமந்தாயா. வீக்ஷண்ய பக்ஷராஜா
சிரஞ்சீவி வாமஸ்யா ஸ்ரீம் உமாபதிஸ்
உங். ருங். லுங். சுங். ஆம். அம். உம்.
லா. லீ. லூ. லே. லம். ஸம். மம. ஜீவ ரெக்ஷதரத் மான்மியம்
தேவ். மாவ் பாததெரிசய. அனுமந்த சரணாய நமஸ்து



இந்த மூல மந்திரத்தை தினமும் செபித்து வர நலமும், வளமும் நிறையும்.

Saturday 29 July 2017

எட்டு


"எட்டு" போடுகிறவனுக்கு "நோய்"
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.

மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம்
அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு
வருகிறது "நோய்".

நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல்,
அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை தேடிக் கொள்ளவே விரும்பும்.

சித்தர் வழி என்பது அனைத்துக்கும்
தெளிவான விடைகளை தருகிறது.

சித்தர்கள் :

"எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!"

என்கிறார்கள்.

நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்
அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,
மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம்.

எத்தனைதான்
மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில்
கட்டுப்பாடு இல்லாமல் போவதால்)
மறுபடியும் இவை தாக்கும்.

இந்த நோய்களை, கொல்லாமல் கொல்லும்
நோய்கள் தரவரிசையில் வைத்துள்ளனர்
சித்தர்கள்.

இதிலிருந்து விடுபட்டு, நாம்
மனிதர்கள், நலமாக வாழ வேண்டும்
என்பதற்காக இந்த முறையை வகுத்துக்
கொடுத்துள்ளனர்.

காலை நேரத்திலோ, அல்லது நேரம்
கிடைக்கும் பொழுதோ, ஒரு
அறையிலோ அல்லது
வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி
நீளம் வேண்டும்) எட்டு போடுகிற
வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள்
நடை பயிற்சி செய்ய வேண்டும்.

முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக
நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள்
வடக்கிலிருந்து தெற்காக நடக்க
வேண்டும். இதை ஒரு நாளைக்கு
இருமுறை செய்ய வேண்டும்.

காலையும், மாலையும் வேளைகள்
மிக வசதியாக இருக்கும்.

இதை செய்வதால் என்ன நடக்கும்!

1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.

2. இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.

3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).

4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.

5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை
கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.

6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.

7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள்
சரியாக செயல்படும்.

8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.

9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில்
வரும்.

10. பாத வலி, மூட்டுவலி மறையும்.

11. சுவாசம் சீராகும் அதனால் உள்
உருப்புக்கள் பலம் பெரும்.

சரி! இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும்.

"8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது
நீங்களே உணர்வீர்கள்,

அந்த வடிவம்
"முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது
ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது.

இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்த
சித்தர்கள், இதையே "வாசி
யோகத்தில்" (மூச்சு பயிற்சியில்)
உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி
எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?

விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து பலனடையுங்கள்!

"வாழ்க வளமுடன்"

Friday 21 July 2017

கணநாதர் உபாசனா

கணநாதர் உபாசனா விதி


பிராதக்காலத்தி லெழுந்திருந்து ஸ்நானபானஞ் செய்து
பட்டு வஸ்திரம் அல்லது
நார்மடி அரையில்டுத்தி
விபூதி யணிந்து அனுஷ்டான முதலியதை முடித்து பரிசுத்தமான விடத்தில்
தன்னந்தனியனாய்
வீற்றிறுந்து யாதொரு
சிந்தனாவஸ்தையுமின்றி அடியிற் கூறியவாரு
தியானஞ்செய்து சக்ரமெழுதி பூஜையில்
வைத்து தூபதீபங் கொடுத்து மூல மந்திரத்தை  ஜெபிக்கவும்.



விக்னேஸ்வரர் மந்திரம்
ஓங் றீங் அங் உங் சிங்
கணதேவாய நம,சகல
துரிதபூத வாதைகளும் 
நசிமசி 11 நாள் உரு 
1008- ஜெபிக்கவும்
சித்தியாம்.
ஓரு வெற்றுலையில் 
அல்லது உன்ளங்கையில் விபூதி
பரப்பி  அதில் இச்சக்கரத்தை ஐங்கோணமாய்க் கீறி
அதிற் பீஜாசட்ரங்களை
வரைந்து அதைச் 
சுற்றிலும் ஓங்காரத்தைப் போட்டு
மூலமந்திரஞ் செபிக்க 
சகல காரியங்களுஞ் 
ஜெயமாம். பல நோய்களும் அகலும்.

பூஜை விவரம்
செம்பு அல்லது மண்
கலத்தில் சுத்தமான ஜலம் சுத்தியாய் மொண்டுவந்து அதில்
மாவிலைக்கொத்து
போட்டு கும்ப வஸ்திரங்கட்டி மஞ்சள் 
குங்குமம் அட்சதை புஷ்பஞ் சாத்தி அதன்முன் வாழையில் 
போட்டு அதில் தாம்பூல
பழம் தேங்காய் புஷ்பம் 
சந்தனம் பரமான்னம்
வைத்து சூடஞ் சாம்பிராணி முதலிய 
தூபதீபங்கொடுத்து 
செய்ய வேண்டியது.
கணபதி மூல மந்திரம்

ஓம் நமோ பகவதே
ஐயும் கிலியும் சவ்வும்
கணபதி வசி வசி சுவாகாவென்று உரு
1008-ஜெபிக்கவும்
சித்தியாம்.

இதன் பலன்
குழந்தைகளுக்கும
பெரியவர்களுக்கும்
சேர்ந்த பயம்,காத்து,
சோகம்,மந்தம்
முதலியவைகளால்
உணடாகும் சுரம் பல தோஷங்கள் 
சிரசிலுண்டாகும்
செவ்வாப்பு கட்டிகள்
தெற்கத்தி நோய்,இழுப்பு வலிப்பு
முதலியவைகளுக்கு
மேற்படி கணேசரைப்
பூஜை செய்து 108
உருவரையில் ஜெபித்து  கும்ப தீர்த்தம் மூன்று
தரம் கொஞ்சம் அருந்தக் கொடுத்து விபூதி பூசிக்கொண்டுவரவும்
சகல வினைகளும் பற்றந்து சௌக்கியப்படும்.

Saturday 15 July 2017

அகோர மந்திர பலன்கள்

அகோர மந்திர பலன்கள்




துங் நமசிவாய என்று உச்சரிக்க- வித்துவான் ஆகலாம்.
ஓங் கங்சிவய என்று உச்சரிக்க - சக்தி அருள் உண்டாம்.
ஓம் சிங்சிவாய என்று நம என்று உச்சரிக்க - நினைப்பது நடக்கும்.
ஓம் பங்சிவாய நம என்று உச்சரிக்க - தடைகள் நீக்கும்.
ஓம் யங்சிவாய நம என்று உச்சரிக்க - துன்பங்கள்  விலகும்.
ஓம் மாங்நமசிவாய என்று உச்சரிக்க - செல்வம் செழித்தோங்கும்.
ஓம் மங்சிவாயநம என்று உச்சரிக்க - கவலைகள் வற்றும்
கெங்ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - வசிய சக்தி மிகும்
ஓம் மங்யங் சிவாய என்று உச்சரிக்க - விஷங்கள் இறங்கும்.
அங் ரங்ஓம்சிவாய என்று உச்சரிக்க - சாதனை படைக்கலாம்.
ஓங் அங் சிங் சிவாயநம என்று உச்சரிக்க  - சப்த கன்னியர் தரிசனம்.
ஓங் வங்சிங் சிவாயநம என்று உச்சரிக்க - முக்குணத்தையும் வெல்லலாம்.
ஹிரீம் நமசிவாய என்று உச்சரிக்க - அரிய பேறுகள் கிடைக்கும்.
ஐயுஞ் சிவாயநம என்று உச்சரிக்க - ஆறு சாஸ்திரம் அறியலாம்.
வங்சிங் ஓம்சிவாயா என்று உச்சரிக்க - தேவர்கள் தரிசனம் காணலாம்.
சங் சிவய நம என்று உச்சரிக்க - விஷ பாதிப்பு நீக்கும்.
ஓம் துங்சிவாய நம என்று உச்சரிக்க - முத்தொழிலும்  சிறக்கும். 

ஸ்ரீலம்ஹரீம் ஓம் நமசிவாய என்று உச்சரிக்க- பெரிய பூமிகள் கொடுக்கும்.
சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.
வங் சிவய நம என்று உச்சரிக்க - மழை நனைக்காது.
சிவாய ஓம்ஸ்ரீ என்று உச்சரிக்க - மழை நிற்கும்.
கலியுங் சிவாய என்று உச்சரிக்க- வெள்ளம் பெருக்கெடுக்கும்.
ஓம் கங்சிவ்வுங்சிவய என்று உச்சரிக்க - பெரியகாரியங்களில் வெற்றி. 

சங்யவ் சி மந என்று உச்சரிக்க - தண்ணீரில் நடக்கலாம்.
மங் நங் சிங் சிவய என்று உச்சரிக்க - பிசாசு, பேய் சரணம் செய்யும்.
"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்.
"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.
"வசாலல சால்ல சிவாய நமா"என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.
"சரனையச் சிவாய நம" என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்.
"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.
"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்
வாமதேவ மந்திரம்
"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்"என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.
"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.
"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.
"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம"என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.
சத்யோசாத மந்திரங்கள்
"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.
"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.
"கிருட்டிணன் ஓம் சிவாய நம"என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்
ஈசான மந்திரங்கள்
"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.
"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.
"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.
"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.
"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.

Wednesday 5 July 2017

சனி கிரக பரிகாரங்கள்

சனி கிரக பரிகாரங்கள் ஜாதகத்தில் சனி கெட்டிருந்தாலோ, ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் சனி திசையினால் கஷ்டங்களுக்கு உள்ளானோர், தினசரி உணவில் கருப்பு உப்பு சேர்த்து வர, கஷ்டங்கள் குறையும். மேலும் ஒரு கருப்பு மிளகும் தினசரி முதல் உணவாக உண்டு வரலாம். பெண்கள், கண்களுக்கு சுத்தமான கருப்பு மை இட்டு வர துன்பங்கள் நீங்கும்.

Saturday 1 July 2017

மலையாள மாந்திரிக போதனம்

சகலத்திர்கும் கட்டு மந்திரம்

சகலத்திர்கும் கட்டு மந்திரம்.

ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு
சத்ருவை கட்டு எதிரியை கட்டு
எங்கேயும் கட்டு சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம

அகத்தியர் மகிரிஷி - மந்திர வாள்

அகத்தியர் மகிரிஷி - மந்திர வாள்

சகல அட்சரகளின் பெருமை

  1. நங் நங் என்றால் நன்மைகள் உண்டாகும்
  2. அங் அங் என்றால் மண்டலத்தில் இடி விழாது
  3. வங் வங் என்றால் உலகமெல்லாம் வசியம்
  4. வசி வசி பீடைகள் நிவாரணம்
  5. மசி மசி சகல விஷங்கள் இறங்கும்
  6. அசி அசி என்றால் அநேகமாய் பெருகிவிடும்
  7. உசி உசி  யாவும் ஒழிந்துவிடும்
  8. மசி நசி நசி மசி பேய் பிசாசுகள் ஒழிந்துவிடும்
அகத்தியர் மகிரிஷி - மந்திர வாள்
1) மோகன மந்திரம் : ஓம் ரீங் மோகய! மோகய!
2. சத்ருக்கள் வசியம்--ஓம் ரீங் வசி!வசி!
3. நோய்கள் தீர---    ஓம் ரீங் நசி நசி
4) துஷ்ட மிருகம் ஓட--ஓம் ரீங் அங்
5) இகபர சித்தி--         ஓம் ரீங் சிவயவசி
6) தம்பனம் –              ஓம் ரீங் ஸ்தம்பய! ஸ்தம்பய!
7) அகர்ஷனம் –     ஓம் ரீங் ஆகர்ஸ்ய !ஆகர்ஸ்ய !
8) உச்சாடனம் நோய் கள் தீர –  ஓம் ரீங் உச்சாடய! உச்சாடய!
9) செளபாக்கியம் பெற: ஓம் ரீங் சிவசிவ!
10) தெய்வ அருள் பெற ஓம் சிவ சிவ ஓம்!
12) சத்ரு சம்ஹாரா மந்திரம்- ஓம் ரீங் மசி நசி நசி மசி
13) நெற்றிகண் மந்திரம்- ஓம் லம் சூஷ்மூநாயா நமக
மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஒரு லட்சம்தடவை உருவேற்றி ஜெபிக்க வேண்டும் மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும்   மந்திரம் நன்கு செயல்பட சைவ உணவு நன்று