AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Tuesday 5 May 2020

மன் மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை

மனதினை பற்றி திருமூலர் கூறும் இப்பாடலினை பொருளை சிந்தியுங்கள்.
மன் மனம் எங்கு உண்டு
 வாயுவும் அங்கு உண்டு
மன் மனம் எங்கு இல்லை
வாயுவும் அங்கு இல்லை
மன் மனத்துள்ளே
மகிழ்ந்து இருப்பார்க்கு
மன் மனத்துள்ளே
மனோலயம் ஆகுமே
               - திருமூலர் திருமந்திரம்  620
மன்மனம்  - ( மனித மனம் ) எங்கு உள்ளதோ அங்கு வாயுவும் இருக்கும். அதாவது சுவாசம் நடைப்பெறும்.
சுவாசம் எங்கு நடைப்பெறுகிறதோ அங்கு மனம் இருக்கும்.  அதாவது மனம் இயங்கும்.

மனம் பற்றிய பல்வேறு தகவல்களை சித்தர்கள் வழி மாலை பார்ப்போம்.

சித்தர்களின் சூட்சும ஞான திறவுக்கோல் 5

சித்தர்களின் சூட்சும ஞான திறவுக்கோல் 5
இப்பிரபஞ்சம் முழுக்க எப்பொருளை எடுத்தாலும் அதற்கு ஸ்தூலம் சூட்சுமம் காரணம் என்ற மூன்று தன்மைகள் உள்ளன.
நம் உடலும் ; ஸ்தூல உடல்,  சூட்சும உடல் ,  காரண உடல் எனும் மூன்று தன்மைகளில் இயங்குகிறது.
 ஸ்தூல உடல் - செல்களால் ஆனது.
 சூட்சும உடல் - அணுக்களால் ஆனது
 காரண உடல் - அலைகளால் ஆனது
 ஸ்தூல உடலின் மையம் - மூலாதாரம்
 சூட்சும உடலின் மையம் - வலது
                                                      நுரையிரல் அருகில்
 காரண உடலின் மையம் - புருவமத்தி
 ஸ்தூல உடல் - சப்த தாதுக்களால் ஆனது
 சூட்சும உடல் - மனம் புத்தி சித்தம்
                           அகங்காரம் முதலிய
                           அந்தகரண கருவிகளால்
                           ஆனது.
 காரண உடல் -  அமுத கலைகளால் ஆனது.
 🕉️ ஸ்தூல உடலின் உள்ளே,  சூட்சும காரண உடல்கள் உள்ளன. அவற்றின் சக்தி வெளிப்பாடே  நம் உடலை சுற்றியுள்ள ஆரா உடல்.
 ஸ்தூல உடல்  - வாய்வழி உணவாலும்
 சூட்சும உடல் - சுவாசத்தினாலும்
 காரண உடல் - எண்ணங்களற்ற
                           தூக்கத்திலும்  ( அ )
                           தியானத்தில் நாம் பெறும்
                           சக்தியினாலும் இயங்குகிறது.
ஸ்தூல உடலிற்கும் சூட்சும உடலிற்கும் இடையிலான இடைவெளியை சரியாக புரிந்துக்கொண்டவர் உணர்ந்தவர்  மனதினை சரியாக இயக்கும் தன்மையினை பெறுகிறார்.
உடலைவிட்டு உயிர் வெளியேறிய பின் ஸ்தூல உடலின் செல்கள் அனைத்தும் பிரிந்துவிடுவதுப்போல் சூட்சும உடலின் அணுக்களும் பிரியும்தானே ?
 அவை எங்கு சென்றது  ?
சிந்திப்போம்
தோழமையுடன்  🙏
கோரக்கர் அன்பன்
ஞானஸ்கந்தன்