AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Monday, 28 September 2020

சரம் ஸ்திரம் உபயத்தை பயன்படுத்துவது எப்படி

அன்றாட வாழ்க்கையில் சரம் ஸ்திரம் உபயத்தை பயன்படுத்துவது எப்படி?

* மேஷம்- சர ராசி
* ரிஷபம் - ஸ்திர ராசி
* மிதுனம்- உபய ராசி
* கடகம்- சர ராசி
* சிம்மம்- ஸ்திர ராசி
* கன்னி- உபய ராசி
* துலாம்- சர ராசி
* விருச்சிகம்- ஸ்திர ராசி
* தனுசு- உபய ராசி
* மகரம்- சர ராசி
* கும்பம்- ஸ்திர ராசி
* மீனம்- உபய ராசி

"சரம்" என்றால் வளர்ச்சி அடைவது.
" ஸ்திரம் " என்றால் நிலையானது.
" உபயம் " என்றால் நிலையற்றது

தினசரி இதை எப்படி பயன்படுத்துவது:

1. நாம் கடன் வாங்கும் பொழுது அன்றைய நேரத்தில் லக்னம் சர ராசியில் அமைந்தால், கடன் தொகை மேலும் மேலும் வளரும் அதனால் சர லக்னத்தில் கடன் வாங்க கூடாது.
கடன் வாங்கும் பொழுது உபய லக்னத்தில் வாங்க வேண்டும்.

2. இதே போல் மருத்துவமனைக்கு செல்வது, நகை அடகு வைப்பது, ஒருவருக்கு பணம் தருவது, போன்றவற்றை சர லக்னத்தில் செய்ய கூடாது. உபய லக்னத்தில் தான் செய்ய வேண்டும்.

3. தொழில் தொடங்குவது, கொடுத்த பணத்தை வாங்குவது, இப்படி வளர்ச்சி அடைய கூடிய விஷயங்களை சர லக்னத்தில் செய்யலாம்.

4. திருமணத்திற்கு முகூர்த்த லக்னம் குறிப்பது, சொந்த வீடு கட்டுவது, சொந்த வீட்டிற்கு குடிபோவது, வீடு நிலம் வாங்குவது ,போன்ற நிலையான விஷயங்களை ஸ்திர லக்னத்தில் செய்யலாம்.


நன்றி


Tiada penerangan foto disediakan.

Saturday, 26 September 2020

ஹனுமன்_சாலீசா#பொருள்_உரையுடன்

#ஹனுமன்_சாலீசா
#பொருள்_உரையுடன் 

அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும். 
தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உடனே வந்து சேரும் என்கிறார் துளசிதாசர். 

அனுமன் சாலீசா என்ற பெயரில் அவர் எழுதிய வடமொழி ஸ்லோகத்தின் தமிழாக்கம் இது! ராமநாமம் சொல்லி வென்ற மாருதியின் திருநாமம் சொல்லி வெல்லுங்கள் .

#அனுமன்_சாலீஸா
#பாராயண #முறை

உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு தூய ஆடை அணிந்து தூய உள்ளத்துடன் ஆஞ்சநேயரைத் தியானிக்க வேண்டும். 

நெய் விளக்கேற்றி தூபம் காட்டியபின் பதினொரு முறை இந்த நாற்பது துதிகளையும் அன்புடன் ஓத வேண்டும். நூறு முறை ஓதுவது சிறப்பு. 

ஒவ்வொரு முறை முடியும் போதும் ஆஞ்சநேயரின் திருப்பாதங்களில் மலர்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கோயிலிலோ வீட்டின் தூய்மையான இடத்தில் ஆஞ்சநேயர் படத்தின் முன்னாலோ பாராயணம் செய்யலாம். 

செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் பாராயணம் செய்ய வேண்டும். 

பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்யப்பட்டால் நினைத்தது நடக்கும் என்பது பெரியோர் கூற்று. அவரது அருளால் எதுவும் நடக்கும் என்பதில் ஐயமில்லை.

#ஸ்ரீராமஜெயம் 🙇‍♂️

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்

எனது மனம் என்னும் கண்ணாடியை ஸ்ரீ குருதேவரின் திருப்பாதத் தூசியால் தூய்மைப் படுத்திக் கொண்டு நான்கு கனிகளைத் தருகின்ற ரகுகுலதிலகமான ஸ்ரீராமனின் மாசற்ற தெய்வீகப் பெருமைகளை விளக்கத் தொடங்குகிறேன்.

புத்தி ஹீன தனு ஜானி கே ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம் ஹரஹு கலேச விகார்

எனது அறிவோ குறுகியது வாயு மைந்தனான ஆஞ்சநேயா உன்னைத் தியானிக்கிறேன் எனக்கு வலிமை அறிவு உண்மை ஞானம் எல்லாம் தருவாய். என்னைத் துன்பங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுவிப்பாய்.

1. ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர 
ஜய கபீஸ திஹுலோக உஜாகர

ஆஞ்சநேயா நீ கடலைப் போலப் பரந்த அறிவும் நற்குணங்களும் பொருந்தியவன் வானரர்களின் தலைவன் மூன்று உலகங்களையும் உணர்வுற்றெழச் செய்பவன். உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

2. ராமதூத அதுலித பலதாமா 
அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா

நீ ஸ்ரீராம தூதன் எல்லையற்ற ஆற்றலின் உறைவிடம் அஞ்ஜனையின் மைந்தன் வாயுபுத்திரன் என்னும் பெயர்பெற்றவன்.

3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ 
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ

மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன் இணையற்ற வலிமை பொருந்திய வீரன் நீ. துய சிந்தனைகளை விரட்டுபவன் நீ. நல்லசிந்தனைகளின் நண்பன் நீ.

4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா 
கானன குண்டல குஞ்சித கேசா

பொன்னிறம் பொருந்தியவன் நீ சிறந்த ஆடைகளை உடுத்தியுள்ளவன் நீ. ஒளி வீசுகின்ற குண்டலங்களையும் காதில் அணிந்துள்ளாய். உனது முடியோ அலையலையாக அழகாக உள்ளது.

5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை 
காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை

உனது கைகளை இடியும் கொடியும் அலங்கரிக்கின்றன. தோளையோ முஞ்ஜைப் புல்லாலான பூணூல் அணி செய்கிறது.

6. சங்கர ஸுவன கேசரீ நந்தன 
தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன

நீ சிவபெருமானின் அவதாரம் கேசரியின் மகன் உனது தேஜசையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது. அனுமனின் தந்தை கேசரி என்னும் வானரர் தலைவர். சிங்கத்தைப் போன்ற ஆற்றல் உடையவராக இருந்ததால் அவர் கேசரி என்னும் பெயர் பெற்றார். அனுமனின் தெய்வீகத் தந்தை வாயு பகவான்.

7. வித்யாவான் குணீ அதி சாதுர 
ராம காஜ கரிபே கோ ஆதுர

நீ அறிவாளி நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன் மிகவும் கூரிய புத்தியை உடையவன் ஸ்ரீராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவன்.

8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா 
ராமலகன ஸீதா மன பஸியா

இறைவன் திருப்புகழையும் பெருமையையும் கேட்பதில் நீ எப்போதும் பரவசம் கொள்கிறாய். ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும் உனது மனத்தில் குடியிருக்கின்றனர்.

9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா 
விகட ரூப தரி லங்க ஜராவா

நீ மிகவும் நுண்ணிய உருவில் சீதையின் முன் வெளிப்பட்டாய் மிகவும் பயங்கார உருக்கொண்டு இலங்கையைக் கொளுத்தினாய்.

10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே 
ராமசந்த்ர கே காஜ் ஸவாரே

மிகவும் பெரிய உருவம் கொண்டு அரக்கர்களை அழித்து ஸ்ரீராம காரியத்தை நிறைவேற்றினாய்.

11. லாய ஸம்ஜீவன லகன ஜியாயே 
ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே

சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனின் உயிரைக் காத்த போது ஸ்ரீராமன் உன்னை எத்தனை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டார்!

12. ரகுபதி கீனி பஹுத் படாயீ 
தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ

ஸ்ரீராமன் உனது பெருமைகளை மிகவும் புகழ்ந்து நீயும் பரதனைப் போலவே தமக்குப் பிரியமானவன் என்று கூறியருளினார்.

13. ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் 
அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்

ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் கூட உனது பெருமைகளைப் புகழ்வதாக ஸ்ரீராமன் உன்னை அணைத்தபடியே கூறினார்.

14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா 
நாரத சாரத ஸஹித அஹீசா

ஸனகர் முதலான முனிவர்கள் பிரம்மா போன்ற தேவர்கள் சிவபெருமான் நாரதர் கலைமகள் ஆதிசேஷன்.

15. யம குபேர திகபால ஜஹாம் தே 
கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே

எமன் குபேரன் திரைக் காவலர்கள் கவிஞர்கள் புலவர்கள் எல்லோரும் உனது பெருமைகளை விளக்க முயன்று தோல்வியே கண்டார்கள்.

16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா 
ராம மிலாய ராஜபத தீன்ஹா

ஸ்ரீராமனிடம் அறிமுகப்படுத்தி சொந்த அரசை மீட்டுக்கொடுத்ததன் மூலம் நீ சுக்ரீவனுக்கு ஓர் இணையற்ற உதவியைச் செய்து விட்டாய்.

17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா 
லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா

உனது அறிவுரைகளின்படி நடந்ததாலேயே விபீஷணன் இலங்கை அரசனானான் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம்.

18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ 
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ

பதினாறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த சூரியனை கனியென எண்ணி நீ விழுங்கிவிட்டாய்.

19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் 
ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்

ஸ்ரீராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தங்கியபடியே நீ கடலைக் கடந்துவிட்டாய். (உனது அளப்பரிய ஆற்றல்களைக் கணக்கிடும் போது) இது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.

20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே 
ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே

எத்தனைக் கடினமான செயலும் உனதருளால் எளிதல் நிறைவேறிவிடும். 

21. ராம துவாரே தும் ரக்வாரே 
ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே

ஸ்ரீராம ராஜ்யத்தின் வாயிற் காவலன் நீ. உனது அனுமதியின்றி அங்கு யாரும் நுழைய முடியாது.

22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா 
தும் ரக்ஷக காஹூ கோ டர்னா

உன்னைச் சரணடைபவர்கள் எல்லா இன்பங்களையும் பெறுகின்றார்கள். நீ பாதுகாவலனாக இருக்கும் போது எதற்காகப் பயப்பட வேண்டும்

23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை 
தீனோம் லோக ஹாங்க்தே காம்பை

உனது ஆற்றலைக் கட்டுபடுத்த உன்னால் மட்டுமே முடியும். உனது ஆற்றலின் முன் மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.

24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை 
மஹாவீர ஜப் நாம ஸுனாவை

மகாவீரன் என்னும் உனது திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது துன்பம் விலகுகிறது.

25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா 
ஜபத நிரந்தர ஹனுமத் வீரா

உனது ஆற்றல் மிக்கத் திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது துன்பம் விலகுகின்றது. மனோ தைரியம் உண்டாகின்றது.

26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை 
மன க்ரம வசனத்யான ஜோ லாவை

மனம் வாக்கு செயலால் அனுமனைத் தியானிக்கும் ஒருவனை அவர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார்.

27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா 
தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா

தவம் புரிகின்ற பக்தர்களின் மேலான ஆசைகளை நிறைவேற்றுகின்ற ஸ்ரீராமனின் பணிகளை நீ நிறைவேற்றினாய்.

28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை 
தாஸு அமித ஜீவன் பல பாவை

மேலும் பக்தனின் ஆசைகளை நிறைவேறுவதுடன் அவன் அழியாக்கனியாகிய இறையனுபூபதியையும் பெறுகிறான்.

29. சாரஹு யுக பரதாப தும்ஹாரா 
ஹை பரஸித்த ஜகத உஜியாரா

சத்திய திரேதா துவாபர கலி என்னும் நான்கு யுகங்களிலும் உனது பெருமை போற்றப்படுகிறது. உனது திருநாமம் உலகம் முழுவதும் சிறக்கிறது.

30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே 
அஸுர நிகந்தன ராம துலாரே

நல்லோரையும் ஞானியரையும் நீயே காக்கிறாய். ஸ்ரீராமனின் மனத்துக்கு உகந்தவனான நீயே தீய சக்திகளை அழிக்கிறாய்.

31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா 
அஸ் வர தீன் ஜானகீ மாதா

எட்டுவித சித்திகளையும் ஒன்பதுவிதச் செல்வங்களையும் கேட்பவருக்கு அளிக்கம் ஆற்றலை சீதா தேவி உனக்கு அருளினாள்.

32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா 
ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா

ஸ்ரீராம பக்தி என்பதன் சாரமே உன்னிடம் உள்ளது. எப்போதும் நீ அவரது சேவகனாகவே இருப்பாய்.

33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை 
ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை

உன்னிடம் பக்தி கொள்வதால் ஒருவன் ஸ்ரீராமனை அடைகிறான். எத்தனையோ பிறவிகளில் தொடர்ந்து வந்த துன்பங்கள் அவனை விட்டு அகல்கின்றன.

34. அந்த கால ரகுபதி புர ஜாயீ 
ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ

அவன் தன் வாழ்வின் முடிவில் ஸ்ரீராமனின் உறைவிடம் செல்கிறான். அங்கு அவன் ஹரி பக்தனாக மதிக்கப்படுகிறான்.

35. ஒளர் தேவதா சித்த ந தரயீ 
ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ

அனுமனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்திடமும் மனத்தைச் செலுத்தாத ஒருவனுக்கும் எல்லா இன்பங்களும் நிறைகின்றன.

36. ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா 
ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா

எல்லாம் வல்ல ஆஞ்சநேயரை நினைப்பவரின் துன்பங்களும் துயரங்களும் விலகி ஓடுகின்றன.

37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ 
க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ

ஓ ஆஞ்சநேயா உனக்கு வெற்றி வெற்றி வெற்றி உண்டாகட்டும். ஓ பரம குருவே எங்களுக்கு அருள்புரிவீர்களாக.

38. ஜோ சத பார் பாட கர ஜோயீ 
சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ

இந்தத் துதிகளை நூறு முறை பக்தியுடன் படிப்பவர்களுக்கு உலகத்தளைகள் எல்லாம் நீங்கப் பெற்று பரமானந்தத்தை அனுபவிக்கின்றனர்.

39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா 
ஹோய் ஸித்தி ஸாகீ கௌரீஸா

இந்த ஹனுமான் சாலீஸாவைப் படிப்பவர்களுக்கு சிவபெருமான் அருள் புரிகிறார் அவன் பரிபூரண நிலையை அடைகின்றனர்.

40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா 
கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா

என்றென்றும் தம் இதயத்தில் இறைவன் எழுந்தருளி வாழட்டும் என்று அவரது நித்திய சேவகனான துளஸுதாசன் பிரார்த்திக்கிறான்.

பவன தனய ஸங்கட ஹரன் மங்கள மூரதி ரூப ராமலஷமன் ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுரபூப

துன்பங்களைப் போக்குபவனுக்கு மங்கள உருவினனும் தேவர்களின் தலைவனும் வாயு மைந்தனும் ஆகிய ஸ்ரீ ஆஞ்சநேயர் எனது இதயத்தில் ஸ்ரீராம லட்சுமண சீதையுடன் நிலவட்டும்.

ஸ்ரீராம ஜெய ராம ஜெயஜெய ராம 🙇‍♂️

Friday, 25 September 2020

இயற்கை மருத்துவம் !

இயற்கை மருத்துவம் !
சளி, இருமல் நீங்க: திப்பிலி, அக்கரா, சுக்கு, மிளகு, மஞ்சள்
செய்முறை: இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினமும் காலை அல்லது இரவில் அரை டீஸ்பூன் எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குறையும். வென்னீரிலும் கலந்து சாப்பிடலாம்.
உடலில் புளிப்பு அதிகம் இருப்பின்:
இஞ்சி, வெற்றிலை, பூண்டு, மல்லி
செய்முறை: இதை நன்றாக அம்மியில் வைத்து அரைத்து வென்னீரில் அந்த சாறை பிழிந்து மாலை அருந்தினால் உடலில் உள்ள புளிப்பு குறையும்.
வாயு மருந்து:
பூண்டு, ஓமம், மஞ்சள், சுக்கு, கருஞ்சீரகம், வாவளங்காய்
செய்முறை:இதை சட்டியில் போட்டு அவித்து சாறை வடிகட்டி குடிக்கவும்.
பித்தம் அதிகம் இருப்பின்: இஞ்சி, சர்க்கரை, கொட்டை முந்திரி, ஏலக்காய் அரிசி, மல்லி,
செய்முறை: இதை அம்மியில் அரைத்து வைத்து சட்னியைப் போல் சாப்பிட்டால் பித்தம் குறையும். அல்லது அவித்தும் குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு நிற்க:
சுக்கு, பூண்டு, வாவளங்காய், பெருங்காயம், இந்துப்பூ, ஓமம்
செய்முறை: இந்த மருந்துகளை அம்மியில் அரைத்து துணியில் வைத்து வெந்நீ:ரில் பிழிந்து எடுத்து ஒரு சங்கு குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப் போக்கு நிற்கும்.
விஷக்குடி மருந்து:
சுக்கு, மல்லி, திப்பிலி, வெற்றிலை, கருஞ்சீரகம், வேப்பிலை கொழுந்து,ஓமம், மல்லி.
செய்முறை: இதை ஒரு சட்டியில் போட்டு அவிக்கவும். பின்னர் அதை வடிகட்டி ஒரு துண்டு கருப்பட்டி போட்டு குடித்து வந்தால் விஷக்கிருமி அழியும்.
பல்வலி மருந்து:
பூச்சிப் பல் இருப்பவர்கள் கிராம்பை அவ்விடத்தில் தூளாக்கி வைத்தால் வலி நீங்கும்.
தலைவலி, தடுமல், தலைபாரம்:
தும்பை , ஓம இலை, மஞ்சள், செங்கல் சுட்டு போட வேண்டும்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து இந்த இலைகளை மஞ்சள் செங்கல் சுட்டுப் போட்டு அதனுடைய ஆவியைப் பிடித்தால் தலைபாரமi;, தடுமல், தலைவலி நீங்கும்.
பேதி குணமாக வழி:
 அவரை இலைச் சாறு, தயிறு
அவரை இலை சாறை தயிருடன் சாப்பிட்டால் பேதி குறையும்.
குமட்டல் வயிற்றுப் போக்கு நீங்க:
எலுமிச்சைப் பழம் சாறு, சீரகம்
எலுமிச்சைப் பழச் சாறில் சீரகம் ஊற வைத்து காயவைத்து சுவைத்து மென்று சாப்பிட வேண்டும்.
இரத்த வாந்தி நீங்க:
ஆடுதொடா இலை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சரியாகும்.
திக்குவாய் குணமாக:
வசம்பு பொடி, அருகம்புல் சாறு
இரண்டையும் கலந்து குடித்துவர திக்கிப் பேசுதல் சரியாகும்.
மூல நோய் குணமாக:
பப்பாளி பழம், மாம்பழம்,தேன்
பப்பாளி பழம், மாம்பழம் இரண்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் குணமாகும்.
கைகால் வெடிப்பு நீங்க:
 கண்டங்கத்திரி இலை, தேங்காய் எ ண்ணெய்
கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாறு பிழிந்து தடவினால் வெடிப்பு நீங்கும்.
பல் உறுதியாக:
மாவிலையைப் பொடி செய்து பற்களை துலக்கி வர பல் உறுதி பெறும்.
சுளுக்கு நீங்க வழி
உப்பு, புளியை கரைத்து கொதிக்க வைத்து பின் இறக்கி ஆறியவுடன் பற்றுப் போட வீக்கம், ரத்தக் கட்டு குணமாகும்.
இரத்தத்திலுள்ள பித்தம் குறைய:
ஆரமா குச்சிகளைத் துண்டுகளாக்கி காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம்.
இரத்தத்தை சுத்தப்படுத்த:
கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி சாப்பிட வேண்டும். கண்பார்வையும் கூர்மையாகும்.
மண்ணீரல் வீக்கத்தை குறைக்க:
கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி தினமும் ஒரு முறை சாப்பிட வேண்டும்.
கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி அரைத்து எந்த இடத்தில் தோல் வியாதி இருக்கிறதோ அந்த இடத்தில் தடவ வேண்டும்.
உடல் வலி, தலைமுடி உதிர்வதை தடுக்க:
கரிசாலை சாற்றுடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து அடுப்பில் வைத்து
இளம் சூடாகவும் காய்ச்சி தைலமாக்க வேண்டும். அதன் பிறகு அதை தலையில் எல்லா இடங்களிலும் தடவ வேண்டும். அஅப்படி த டவினால் தலை முடி உதிர்வதையும், நரை ஏற்படுவதையும் தடுக்கும். உடலில் வலி ஏற்படும் இடத்தில் தடவினால் வலி நீங்கும்.
கண் நோய்களை குணமாக்க:
பொண்ணாங்கன்னி கீரையை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமையில் கண்ணாடி அணியத் தேவையிராது. கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றையும் கண் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணமாக்கும்.
காய்ச்சல் நீங்க:
துளசி இலை 50, மிளகு 20 அல்லது முப்பது.
துளசி இலையையும் மிளகையும் நன்றாக அரைத்து பயிறு அளவு சிறுசிறு மாத்திரைதகளாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். இம்மாத்திரைகளை இம்மாத்திரைகளை காலை, மாலை இருவேளைகளிலும் சுடு தண்ணீருடன் உட்கொண்டால் காய்ச்சல் நீங்கும்.
சளி தொல்லை, சளி காய்ச்சல், மூச்சுத் திணறல் நீங்க:
சுக்கு ஐந்து கிராம், கண்டங்கத்திரி வேர் முப்பது கிராம், கொத்த மல்லி முப்பது கிராம், சீரகம் 2 கிராம், தண்ணீர் 2 லிட்டர்
தேவையான பொருட்கள் அனைத்தையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஆகும்வரை காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு காய்ச்சிய தண்ணீரை 4 முதல் 6 வேளைகள் குடித்தால் சளி தொல்லை நீங்கி விடும்.
காயப்புண் நீங்க:
அரிவான்மனைப் பூண்டு இலை 20 ஐ நன்றாக கசக்கி அதன் சாற்றை காயத்தில் இட்டால் புண் விரைவில் ஆறும்.
தீப்புண், தீக்காயம் நீங்க:
வேப்பம்பட்டையை இடித்து கசாயமாக்கி காய்ச்சி தடவ வேண்டும். வாழைப்பட்டை சாறு பிழிந்து காயத்தில் தடவ வேண்டும்.
தலைவலி நீங்க:
அரை லிட்டர் தண்ணீர், சங்குப் பூக் கொடி பச்சை வேர் நாற்பது கிராம்.
சங்குப்பூக்கொடி பச்சை வேரை நன்றாக நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு 300 மி.லி. வரை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும். காய்ச்சிய நீருக்கு காக்கணக் குடிநீர் என்று பெயர். காக்கணக் குடிநீரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாக ஆறு முறை சாப்பிட்டால் தலைவலி முழுமையாக நீங்கிவிடும்.
தொண்டைவலி நீங்க: சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் இரண்டையும் கலந்து சூடு செய்து மித சூட்டில் தொண்டையில் தடவிக் கொள்ளவும்.
பல்வலி நீங்க:
சுடுதண்ணீரில் உப்பைப் போட்டு வாiயு நன்றாகக் கொப்பளித்தாலும், சுக்குத் துண்டை வாயில் போட்டுக் கொண்டாலும் பல்வலி முழுமையாக நீங்கி விடும்.
வாய்புண், குடல் புண், வாயுத் தொல்லை நீங்க:
வெங்காயம், மிளகுதூள், உப்பு, தக்காளி, மணத்தக்காளி கீரை.
மணத்தக்காளி கீரைiயும், வெங்காயத்தையும் , தக்காளியையும் பொடீயாக நசுக்கி மிளகு தூளும் உப்பும் சேர்த்து கொதிக்க வைத்து சாறாக குடித்தால் வாய்ப்புண், குடல் புண், வாயுத் தொல்லை முழுமையாக நீங்கி விடும்.
சளி கோலை, காது மந்தம் நீங்க:
தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்தி அதன் பிறகு தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் சளி கோலை, காது மந்தம் நீங்கிவிடும்.
உடல் மெலிவு பெற:
பப்பளிக்காயை சமைத்து உண்ண வேண்டும்.
உடல் தொப்பை குறைய:
சுரைக்காயை வாரம் இருமுறை சாப்பிட வேண்டும்.
கால் ஆணி குணமாக:
வெள்ளை அரக்கு அரைத்து வைத்து ஆணிப் பகுதியில் கட்டி வரவும்.
குடல் புண் குணமாக:
 தினமும் ஒரு டம்பளர் திராட்சைப் பழச் சாறு குடித்து வர அல்சர் நீங்கும்.
மூலம்:
பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். அதன்பிறகு வெந்தயம் சிறிதளவு சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் மூலம் குணமாகும்.
சர்க்கரை நோய் நீங்க:
பப்பாளி பழமும், கொய்யா பழமும், பாகற்காயும் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம்.
மஞ்சள் காமாலை:
திராட்சை பழம் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.
யானைகால் நோய் நீங்க:
வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.
நரம்புத் தளர்ச்சி நோய் நீங்க:
அத்திப் பழம் தினந்தோறும் ஐந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி விடும்.
வயிற்று வலி, பித்த வெடிப்பு நீங்க:
மருதம் இலையை அரைத்து ஒரு ஸ்பூன் காலையில் சாப்பிட வேண்டும்.
காது அடைப்பு, காது கட்டி நீங்க:
தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் காது அடைப்பு, காது கட்டி நீங்கி விடும்.
வாயுத் தொல்லை நீங்க:
பாலில் வாய்விலங்கா சிறிதளவு சேர்த்து காய்ச்சி கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு வாயு தொல்லை ஏற்படாது.
இந்துப்பூ, பெருங்காயம் இரண்டையும் உரலில் உரசி தண்ணீர் சேர்த்து கொடுத்தால் வாயுத்தொல்லை நீங்கும்.
தூதுவளை, கண்டங்கத்திரி, பனங்கற்கண்டு, சிறுதும்பை
முதலில் தூதுவளை, கண்டங்கத்திரி, சிறுதும்பை மூன்றையும் உரலில் வைத்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்தால் சளித் தொல்லை நீங்கும்.
ஆஸ்துமா இருந்தால்:
வேப்பங் கொட்டை 3, திப்பிலி.
வேப்பங்கொட்டையிலுள்ள பருப்பை எடுத்து அதே அளவு திப்பிலியையும் சேர்த்து வறுத்து, இடித்து, தூளாக்கி வெந்நீரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா குணமாகும்.
மஞ்சள்காமாலையாக இருப்பின்:
வில்வ இலை, வெந்தயம், குளுக்கோஸ்., ஒரு டீ ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து அந்த நீருடன் குளுக்கோஸ் சேர்த்து தொடர்ந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை சீக்கிரமாக குணமாகும். இதற்கு எவ்வித பத்தியமும் கிடையாது.
வாய்ப்புண்:
மாசாக்காயை ஷதினமும் இரண்டு தடைவ உரலில் உரசி அதை வாய்ப்புண் உள்ள இடத்தி;ல் தேய்த்து வந்தால வாய்புண் குணமாகும்.
தீப்புண்:
சுண்ணாம்பை நீரில் கரைத்து  மேலே வரும் தெளிந்த நீரை எடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தீ பட்ட இடத்தில் தேய்த்து வந்தால் தீப்புண்ணால் ஏற்பட்ட தழும்பு கூட வராது. சீக்கிரமாகத் தீப்புண் ஆறிவிடும்.
ஜலதோஷமாக இருப்பின்:
சுக்கு, மிளகு, வெற்றிலை, மஞ்சள் தூள், வெள்ளைப் பூண்டு, கருஞ்சீரகம், வேப்பங்கொழுந்து.
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து வேகவைத்து அதன் வற்றிய நீரை குடித்தால் அதிவிரைவில் குணம் கிடைக்கும். அம்மை போட்டிருப்பினும் 2, 4, 6, 8 தினங்களில் கொடுத்தால் குணமாகும்.
வாய்ப்புண்ணாக இருப்பின்:
மாசாக்காய், மாதுளம் பழத் தோல், சீரகம், அதிமதுரம், சீனாகரம்
இவற்றை நீரில் வேகவைத்து வடிகட்டி அந்த நீரை குடித்து வந்தால் குணமாகும்.
சளி தொல்லை:
காயம், திப்பிலி, மாசாக்காய், அதிமதுரம், சித்திரத்தை, வாய்விளங்காய், பால் கடாச்சி, மிளகு, பூண்டு, சீனாகரம், சுக்கு. இம்மருந்துக்குப்பெயர் உரை மருந்து.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் உரலில் தேய்த்து சேர்த்து கொடுக்கவும். மாதம் ஒரு முறை கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை இராது.
குழந்தைகளுக்கு மார்பில் கட்டி இருப்பின் சமுத்திராபழத்தை உரலில் தேய்த்து அதை மார்பில் பூசிவ ந்தால் ஒரு வாரத்தில் கட்டி கரைந்து விடும்.
இரும்புச் சத்து குறைவாக இருப்பின் தினமும் கருப்பட்டி காப்பியை அருந்தி வந்தால் சீக்கிரத்தில் அளவு கூடும். குழந்தை உண்டாகி இருக்கிறவர்கள் 6, 7 மாதத்தில்இதைப் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பித்தவாயு குர்ணி:
காய்ந்த கொட்டை முந்திரி பழம், ஏலக்காய், கொத்தமல்லி விதை, இஞ்சி ஆகியவற்றை நீரில் அவித்து அந்த நீரை மூன்று நாட்களுக்குப் பருகி வந்தால் பித்த வாயு தீரும்.
நீரழிவு நோய் இருப்பவர்கள் நாவல் பழக் கொட்டையை காய வைத்து பொடி பண்ணி தினமும் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து பருகி வந்தால் விரைவில் குணமாகும். சுகர் ஆரம்பநிலையில் இதை கையாண்டால் குணம் கிடைக்கும்.
குழந்தைக்கு சீலம் போவதாக இருப்பின் மாதுளம்பழத்தின் பூவை எடுத்து அரைத்து ஆட்டுப் பாலில் கலந்து கொடுத்தால் சீக்கிரம் குணம் கிடைக்கும்.

Wednesday, 9 September 2020

தமிழர்களின் கோவிலே இயற்கை மருத்துவமனை

*தமிழர்களின் கோவிலே இயற்கை மருத்துவமனை:*

 *இறை உறையும் மனை*
       *-----------------------------------*

*வெங்கல மணி ஓசை:* 
*--------------------*
*உடல், மனம், உயிர் மூன்றும், உடலில் உள்ள 7 சக்கரமும், *மின்காந்த அலையும் சீர்படுத்தி, ஒரே நேர்கோட்டில் பாதம்*
*முதல் தலை உச்சி நோக்கி* *உயிர்சக்திகளை இயக்கிட வெங்கல மணி ஓசை உதவுகிறது.* 

*கருங்கல்லை சுற்றுவது :* 
*-----------------------*
*உடலின் மின்காந்த சக்த்தியை அதிகரித்து உடல் இயக்கத்தை சீர்படுத்தி உடல் உயிர், மனதை மேல் நோக்கி செலுத்தி செழுமையாக்க கோவிலை சுற்றி வர வேண்டும்.* 

*மந்திர உச்சாடனங்கள்:* 
*-----------------------*
*உடலின் மூளை, ரத்தம், சவ்வு, ரத்த நாளங்கள், உடல் உறுப்புகள், தசைகள், எலும்புகள் சீராக்கும், நோய் நீக்கி உடலின் செயலாற்றலை அதிகரிக்கும். ஜப்பானிய நீர் ஆராய்ச்சியாளர் இதை நிருவி உள்ளார்.* 

*தீர்த்தம்:*
*--------*
*உடல் நோய் குணமாக உள்மருந்து, துளசி, இளநீர். உணவே மருந்து.* 

*சந்தனம்/ குங்குமம்:*
*-------------------*
*கருங்கல், மந்திர உச்சாடனத்தால் மனோ சக்தியை அதிகப்படுத்தி, நரம்பு மண்டலங்களை குளிர்வித்து அதிகப்படுத்திய சக்திகள் உடல் சூட்டால் வெளியேறாமல் தடுக்க சந்தனமும், குங்குமம் மூன்றாவது கண் எனப்படும் ஞான கண் மேல் இடப்படுகிறது.* 

*ஐம்பூதங்கள்:*
*-------------*
*1. சாம்பிராணி (ஆகாயம்),*
*2. ஊதுபத்தி (காற்று),*
*3. தீபாராதனை (சோதி/நெருப்பு),*
*4. திருநீர் (நீர்),* 
*5. சந்தனம்(மண்),* 
*6. குங்குமம் (உயிர்/மனம்).* 

*ஐம்பூதங்களால் ஆன இவ்வுடலை இயற்கையை கொண்டே சீராக இயக்கி நலமுடன் வாழ நாள்தோறும் கோவிலுக்கு சென்று இயற்கை மருத்துவம் செய்தல் வேண்டும்.* 

*சித்தர்:* 
*-------*
*ஐம்பூங்களால் ஆன இவ்வுடலை கொண்டு சித்தம் தெளிந்து, 8 வகையான சித்திகள் பெற்று, அதன் மூலம் மற்ற சித்திகள் பெற்று ஈசனோடு இரண்டற கலந்து ஒன்றானவர்கள்.* 

*சக்திமிக்க சிவாலங்கள் அனைத்தும் சித்தர்கள் சமாதிகளின் மேல் இலிங்கம் வைத்து கோவிலாக எழுப்பப்பட்டது.* 

*உ.த: ஐம்பூத தளங்கள், 12 சோதி இலிங்க தளங்கள்.*   

*இறைவன்:* 
*----------*
*ஈசன்- படைத்தல், காத்தல், மறைத்தல், அருளுதல், அழித்தல் எனும் ஐந்தொழிலை செய்பவர்.* 

*ஈசன்:* 
*-----*
*உலகை படைத்த ஈசன் இலிங்க, சோதி வடிவாக உள்ளவன்.* 

*இலிங்க வடிவம்:* 
*----------------*
*சூரிய ஒளி இவ்வுலகில் இலிங்க வடிவத்தில் விழுகிறது ( கூகுளில் இதை பார்த்து உண்மையை உணருங்கள்).* 

*சோதி:* 
*--------*
*இருளை போக்கும் சோதியானவன் சூரியன்.* 

*சோதி/ சூரியன்:* 
*----------------*
*கதிரவன் சூடான ஆண் தன்மை உடையது.* 

*நிலவு/ பிறை:* 
*-------------*
*நிலவு குளிர்ச்சியான பெண் தன்மை உடையது.* 

*நவ கிரகம்: 9 கிரகங்கள், 27 நட்சித்திரங்கள், 12 ராசிகள், கூட்டுத்தொகை 48, 48 - ஒரு மண்டலம்.* 

*96 - சிவ தத்துவங்கள், 2 மண்டலங்களை (96) கொண்டது.* 

*108 - திவ்ய தேசங்கள்:*
*----------------------*
*108 வர்ம புள்ளிகள் உண்டு, இதை கொண்டு உடலில் ஏற்படும் நோய்களைக் குணமாக்கலாம்.*

*அட்டமா சித்திகள்:*
*------------------*
*8 வகையான சித்திகள், ஐம்பூதங்களோடு சேர்ந்து பிரிந்து நிற்பது.*

*நவ கண்டம்:* 
*-----------*
*யோகத்தால் உடலை 9 பிரிவுகளாக பிரித்து சேர்ப்பது.* 

*இந்து சமயம் விஞ்ஞான அறிவியல் சமயம்.* 

*பாரத இந்து சமயத்தை பின்பற்றி இயற்கையோடு இணைந்து, சீரும் சிறப்பாக வளமுடன் வாழ்க.*

Friday, 4 September 2020

ஸ்ரீ ராம

*🔯மன அமைதியும், வாழ்வில் வளமும் சேர்க்கும் ஸ்ரீ ராம மந்திரங்கள்*

*🔯ஸ்ரீ ராம மந்திரத்தை சொன்னால் அனைத்து கடவுள்களும் உங்கள் வீடு தேடி வருவர்.*

 இதனால் மன அமைதியும், உங்கள் வாழ்க்கையில் வளமும் பெருகும்.
 

ஸ்ரீ ராமா என சொன்னாலே வாழ்க்கை வளம் பெற்று செல்வ செழிப்பு உண்டாகும்.

 இவ்வளவு ஏன், இராமாயணத்தை முழுமையாக படிக்காமல் போனாலும், ராம் என்ற இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரித்தாலே ஆணவம், காமம், பேராசை ஆகியவை எல்லாம் அழிந்து அன்பும், அறிவும் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி மனிதனிடம் இருக்கும் மனிதத்தை அழிக்கக் கூடிய விஷயங்களை எல்லாம் 'ராமா' என்ற ஒற்றை பெயர் செய்வதால், நாம் வாழ்வின் அனைத்து வித நன்மைகளையும் அருளையும் பெற முடியும்.

ராம நாமத்தை சொல்லி ராமனிடம் நாம் சரணடைய நமக்கு மோட்சத்தை கொடுப்பார்.

*🔯ஸ்ரீராம மந்திரங்கள்*

*🙏ராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:*

*🙏ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ*

*⚜️பொருள்:*

இந்த மந்திரம் ஸ்ரீ ராமனின் பல்வேறு பெயர்களை பிரதிபலிக்கின்றது. ராமனை புகழும் இந்த மந்திரம் மிக மங்களகரமாந்து. தாய் சீதா தேவியின் கணவனான் ராமனின் பெயர் சொன்னாலே இன்பத்தை வாரி வழங்குவார்.

*🔯வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும் மந்திரம்:*

*🙏ஓம் க்லீம் நமோ பகவதயே ராமசந்திராய சகலஜன வஸ்யகராய ஸ்வாஹா*

*🔯பொருள்:*

பீஜ ஒலியால் ஆன இந்த மந்திரம் சொல்ல சொல்ல, காந்தத்தைப் போல நமக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் தேடி வரும். இதை சொல்லி வர உலக அமைதி உண்டாகும்.

*🙏ஸ்ரீ ராம மூல மந்திரம்*

*மிக எளிய ஆனால் சக்தி வாய்ந்த மந்திரம்:*

*"ஸ்ரீ ராம ஜெயம்"* 

இதன் பொருள் அனைவரும் அறிந்ததே, ராமருக்கே வெற்றி. நாம் ராமனை வேண்டி இந்த மந்திரத்தை சொன்னால் அமைதி, நம்பிக்கை, வெற்றி கிடைக்கும்.

இந்த மந்திரத்தை 

*"ஓம் ஸ்ரீ ராமாய நமஹ: "* 

என்றும் கூறுவதுண்டு.பக்தனிடம் தோற்ற ராமன் மற்றும் ஆஞ்சநேயர்... எப்படி சாத்தியமானது தெரியுமா?

*கோதண்ட ராம மந்திரம்*

*ஸ்ரீராம் ஜெய ராம் கோதண்ட ராமா
பொருள்:"*

*🙏கோதண்டம் என்றால் வில் என்று பொருள். வில்லை ஏந்திய ராமனின் பெயரை உடைய இந்த மந்திரத்தை சொல்லி வர நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்களை அழிக்கும்.*

 *⚜️வெற்றிக்குரிய மந்திரம்.*
*ராம தாரக மந்திரம்*

*🙏ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்*

தசரதன் தெய்வ பிரவியான ராமன் உள்பட 4 பிள்ளைகளை ஏன் பெற்றார் தெரியுமா?

*🔯ஸ்ரீ ராமர் காயத்ரி*

ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம:

 *⚜️ப்ரசோதயாத்ராம தியான மந்திரம்*

*ஓம்* *ஆபதாம்பஹர்தாரம்* *தாதாராம் சர்வசம்பதாம்*
*லோகாபிராமம்* *ஸ்ரீராமம்*' புயோ புயோ* நமாம்யஹம்*🌹🌹🙏