AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Friday, 12 April 2019

Ketu and Rahu ruled chakra

உடல் கட்டு மந்திரம்


உடல் கட்டு மந்திரம்:



விபூதியை கையில் வைத்துக்கொண்டு வடக்கு முகமாய் இருந்து கொண்டு



"ஓம் உள்ளங்கால் இரண்டும் பூமாதேவி காவல் கணுக்கால் இரண்டும் கணபதி காவல் முழங்கால் இரண்டும் முக்கோணர் காவல் துடை இரண்டும் துர்க்கை காவல் அரை ஆதி சிவன் காவல் வயுறு வைரவன் காவல் மார்பு மார்க்கண்டேயன் காவல் கழுத்து கந்தர்வன் காவல் உதடு உத்தமாதேவி காவல் பல்லு பரசுராமன் காவல் நாவு நாராயணன்    காவல்       கண்ணுரெண்டுக்கும்   காளிங்கராயன் காவல் நெத்திக்கு நீலவர்ணன் காவல் தலைக்கு தம்பிரான் காவல் உடம்பு சுற்றிலும் சங்கு சக்கரம் காவல் என்னை கார்க்காவிட்டால் இது என் கட்டல்ல ஈஸ்வரன் கட்டு என்னை கார்க்க நம சிவாய "



இந்த மந்திரத்தை 21 முறை சொல்லிவிட்டு பிறகு பூஜையில் அமரவும்.



விபூதியை தன்னைச்சுற்றிலும்



போட்டு கொண்டால் எந்த மந்திரவாதி என்னவிதம் செய்தாலும்



நம்மிடம் ஏறாது. எந்த தீய சக்தியும் நம்மை ஒன்றும்



செய்ய முடியாது.



எந்தவொரு மந்திரம் செபிக்கும் முன்னரும் இக்கட்டு மந்திரத்தை செபித்து விபூதியை நம்மை சுற்றிப்போட்டுக்கொண்டால்



அம்மந்திரத்தை சித்தி செய்ய விடாமல் செய்யும் துஷ்டசக்திகளும்,கெட்டவர்களின் சதியும்,மற்ற எந்த இடையூறும் நீ அந்த விபூதியை விட்டு வெளியே வரும் வரை உன்னை நெருங்காது.அதற்குள் நீ சித்தி செய்ய வேண்டிய மந்திரத்தை சித்தி செய்து கொள்ளலாம். நீ அவ்விபூதியை விட்டு வெளியேரி விட்டால் அவ்விபூதியின் அற்றல் முறிந்து விடும்.

Wednesday, 10 April 2019

பில்லி, சூனிய ஏவலில் இருந்து காத்துக் கொள்ள...!

பில்லி, சூனிய ஏவலில் இருந்து காத்துக் கொள்ள...!

காலம் காலமாய் மாந்திரிகம் என்பது அமானுஷ்யம் நிறைந்த ஒரு கலையாகவே இருந்து வருகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றிய விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும், நம்பிக்கை என்கிற பெயரில் நம்மில் பலரின் நிம்மதியையும், பொருளையும் அழிக்கும் ஒரு கலையாக இருக்கிறதென்றால் மிகையில்லை...மாந்திரிகம்என்பது அடிப்படையில் ஒரு மனிதன் தன் சக மனிதனை தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ஆட்டுவிப்பதாகவோ அல்லது அழிப்பதாகவோதான் கருதப் படுகிறது. பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதெல்லாம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் உத்திகள். இது பற்றிய தகவல்களை முன்னரே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன்.அந்த வரிசையில் இன்று பில்லி, சூனியம், ஏவல் ஆகியவைகளினால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப் பட்டதாய் கருதப் படுகிறவர்கள் தங்களை காத்துக் கொள்ளும் முறை ஒன்றினைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல்கள்

கோரக்கர்அருளிய"
சந்திரரேகை"

எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.ஓதிடுவேன் பேய்பில்லிச்சூனி யங்கள்ஓடுவதற்கு மந்திரங்கள் உண்மை யாகநீதியுடன் ஓம்உம்லம்சிம் நம்வம்கிலீம்ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கேதீதின்றி முக்கோணம் பெரிதாய்க் கீறித்திட்டமுடன் அஉஇ உள்ளே நாட்டிப்பேதிக்கா வோங்காரம் சுற்றித் தாக்கிப்பிரபலமாய் செபிக்கச் சூனியங்கள் போமே.-கோரக்கர்.இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்தயந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான செப்பு அல்லது வெள்ளியால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான முறைகள் இருக்கின்றன. அந்த தகவல்களை முந்தையபதிவுகளில் பார்க்கலாம். அதன் படியே இந்த யந்திரங்கள் கீறப்பட வேண்டும்.இப்போது  வெளிச்சம் நிரம்பிய, தூய்மையான அறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து, யந்திரத்தை வலதுகையில் ஏந்தியவாறு "ஓம் உம் லம் சிம் நம் வம் கிலீம் ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கே" என்ற மந்திரத்தை அந்தி, சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் மூன்று நாட்கள் தொடர்ந்து செபித்து வர பில்லி, சூனியம், ஏவல்போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டுநீங்கிவிடும் என்கிறார்.

Friday, 29 March 2019

Basic Seed and Shakti Chanting for Pitta Dosha

Vam (Vum), Lam (Lum), Yam (Yum) Shrim (shreem), Aim 

Aum Shreem Aim Namaha

Vum, Lum Aum 

For more details of Siddha Medication and Consultation , please whats app +601111467026


நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்

நம்முடைய சில செயல்கள் நமக்கு எவ்வாறு தோசமாகி நம்முடைய வளர்ச்சியை கெடுக்கிறது என்று நமக்கு தெரியாது
அதுபோல சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விளக்கி நமக்கு நம்மை செய்யும் ......

1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் .

இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும்
குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சினிக்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும் ....

2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .

3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய
பணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து
ஆயுளை விருத்தி செய்யும் .

4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும் .

5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல்
தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .

6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .

7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,
நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் ,மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .

8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமை
தோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை ,பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )
நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் ,
மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .

9.நாகங்க்ளை கண்டதும் அடிக்காமல் இருப்பது ,இறந்த நாகத்தின் உடலை
கண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,
குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் .
( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )

10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது,
வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள் ....

இவைகள் பொதுவானவை
ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல
வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை
புரிந்து செய்தாலும் ,தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான் .....