Tuesday, 22 November 2016

திருமந்திரப்பாடல் எண் 64.5.

                 ஓம் சிவாய நம
               திருச்சிற்றம்பலம்
 
எங்கும் சிவனே,எதிலும் சிவனே, எல்லாம் சிவனே. சிவன் ஒருவனே ஆதி அந்தம் எல்லாம் என் அப்பன் ஈசன் ஒருவனே.

                   திருச்சிற்றம்பலம்
 
 திருமந்திரப்பாடல் எண் 64.5.
**********************************

 திருமந்திரப்பாடல்
*********************

பாடல்:

மூல நாடி முகட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே

பொழிப்புரை

மூலாதாரத்திலுள்ள நடுநாடியில் முக்கட்டு உண்டாம். விரிவான புருவநடுவின் உச்சியில் கண் நாக்கு மூக்குச் செவி என்னும் நான்கு வாயில்களும் ஒன்றுகூடும். அவற்றின் நடுவுள் திருவருள் நினைவுடன் இருப்பீர்களாயின் உச்சித்துளை வாயிலை வெளியுறக் காண்பீர்கள். அம் மேலைவாசலை வெளியுறக் கண்டவன் கனவிலும் காலன் வருவான் என்னும் நினைவு உண்டாகாது. சிவவொளிமுன் ஆணவவல்லிருள் மூளாமை இதற்கொப்பாகும். முக்கட்டு - படைப்போன் காப்போன் துடைப்போன் ஆகிய மூவரின் சுடர்உருவி. இவற்றை முறையே பிரமக்கிராந்தி, விட்டுணுக்கிராந்தி, உருத்திரக்கிராந்தி என்ப. இப்படிப் பாடங்கொள்வாரும் உண்டு. மேலைவாசல் - உச்சித்துளை வழி எனலுமாம்.
                 

Thirumanthiram பாடல் எண் :64.5

               திருச்சிற்றம்பலம்
இந்த நாள் தங்களுக்கு இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் ..!!

 ஓம் சிவாய நம
நமசிவாயஓம்

                    திருச்சிற்றம்பலம்

 

No comments:

Post a Comment