ஓய்வெடுக்காமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் உபாயம் ஒன்றினை புலிப்பாணி சித்தர் தனது "புலிப்பாணி ஜாலத்திரட்டு" என்னும் நூலில் அருளியிருக்கிறார். இதன் மூலம் ஒருவன் இளைப்பில்லாமல் தொடர்ந்து ஒடிக் கொண்டேயிருக்கலாம் என்கிறார்.
அந்த பாடல் பின்வருமாறு....
விழுதியை வாயில் மெண்ணு தின்று
விட்டடக்கிக் கொஞ்சம் தாடையிற் சண்ணு
பழுதர வோடவே ளுபாரி லென்னாளும்
பத்தாலு மிளைப்பில்லைப் பரிந்து பண்ணு
- புலிப்பாணி.
கையளவு விழுதி இலையை எடுத்து வாயில் போட்டு நன்கு மென்று சுவைத்து அதில் ஒரு பகுதியை விழுங்கிய பின்னர் மீதி இருப்பதை தாடையில் அதக்கி வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தொடர்ந்து ஓடலாமாம். இப்படி ஓடுவதால் களைப்பு, இளைப்பு என எதுவும் தோன்றாது என்கிறார்.
நவீன கால ஓட்டப் பந்தயங்களில் பல்வேறு செயற்கை மருந்துப் பொருட்கள் களைப்பில்லாமல் ஓடுவதற்கு துணை புரிகிறது. ஆர்வமுள்ளோர் இந்த விழுதி இலையை ஆய்வுக்குட்படுத்தி அதன் தன்மைகளை வெளிக் கொண்ரலாமே!
வேறொரு தகவலுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.
No comments:
Post a Comment