AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Monday, 2 May 2016

விபூதி (திருநீறு)

விபூதி (திருநீறு)

சைவசமய பெருமக்களிற்கு திருநீறு, உருத்திராட்சம்,ஐந்தெழுத்து ஆகிய மூன்றும் மிகவும் இன்றியமையாதவை.

ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.

எந்த பொருளை சுட்டாலும் அது கரியாகி பின்னர் சாம்பல் ஆகும். சாம்பலை மேற்க்கொண்டு எரிக்க முடியாது. இதன் மூலம் இது வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்த்துகிறது. முடிவில் முடிசார்ந்த மன்னரும் ஒரு பிடி சாம்பல் ஆகும் நியதியை இது சுட்டிக் காட்டுகிறது.

அணியும் காரணம்

"மந்திரமாவது நீறு" மன் + திறம் = மந்திரம்.

மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.

புருவ நடுவே தியான நிலை அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர்.

மனித உடலில் நெற்றி வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.

ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள். மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான்.

எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.

திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்.

1. கல்பம்
2. அணுகல்பம்
3. உபகல்பம்
4. அகல்பம்

கல்பம்

கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பது கல்பத் திருநீறு எனப்படும்.

அணுகல்பம்

ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

உபகல்பம்

மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

அகல்பம்

அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.

அணியும் முறை

வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போதுசிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும்.

ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.

நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை "உத்தூளனம்" எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை "திரிபுண்டரம்" எனப்படும்.

திருநீறு அணியும் இடங்கள்

உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.

1. தலை நடுவில் (உச்சி)
2. நெற்றி
3. மார்பு
4. தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5. இடது தோள்
6. வலது தோள்
7. இடது கையின் நடுவில்
8. வலது கையின் நடுவில்
9. இடது மணிக்கட்டு
10. வலது மணிக்கட்டு
11. இடது இடுப்பு
12. வலது இடுப்பு
13. இடது கால் நடுவில்
14. வலது கால் நடுவில்
15. முதுகுக்குக் கீழ்
16. கழுத்து முழுவதும்
17. வலது காதில் ஒரு பொட்டு
18. இடது காதில் ஒரு பொட்டு

பலன்கள்

திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, இரத்த ஓட்டமும் சீர்படும். திருநீறு கிருமிநாசினியும் கூட, அதனை உடல் முழுவதும் பூசுவதனால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும். நெற்றியில் தரிப்பதனால் தலைக்குள் கோர்க்கும் நீரினை திருநீறு வெளியேற்றுகிறது.

திருநீற்றிற்கு விபூதி, பசுமம், பசிதம், சாரம் இரட்சை என பல பெயர்கள் உண்டு.

1. விபூதி  - மேலான ஐசுவரியத்தைத் தருவது.

2. பசிதம் - அறியாமையை அழித்து, சிவஞான
                     சிவதத்துவத்தைத் தருவது.

3. சாரம்  - ஆன்மாக்களின் மலமாசினை அகற்றுவது.

4. இரட்சை - ஆன்மாக்களை துன்பத்தினின்றும்           நீக்கி பேரின்ப வாழ்வு தருவது.

5. திருநீறு - பாவங்களை எல்லாம் நீறு செய்வது.

6. பஸ்மம் - பழைய வினைகளை பஸ்மமாக்குவது.

திருநீறை (விபூதி) மூன்று கோடுகளாக போடுவதன் தத்துவம்:

மும்மலங்கலான ஆணவம்,கன்மம்,மாயை மூன்றையும் ஞானத்தினால் சுட்டெரித்து நிர்மல நிலையினை அடைந்தவர் என்பதை குறிக்கவும்,
சூரிய கலை சந்திர கலை அக்னி கலை மூன்றையும் கடந்து மூச்சற்ற சுத்த நிலையினில் அருள் அனுபவம் பெற்றவர் என்பதை குறிக்கவும் போடப்படுகின்றது

விபூதி வாங்கும் முறை

ஒற்றைக் கையால் விபூதி வாங்கக்கூடாது. வலது கையின் கீழே இடது கையை சேர்த்து வைத்தே விபூதி வாங்க வேண்டும். ஆலயங்களில் தரும் விபூதியைப் பூசிக் கொண்டது போக, மீதியை தரையில் உதறக் கூடாது. வலது கையில் வாங்கிய விபூதியை அப்படியே நெற்றியில் தரித்துக் கொள்ள வேண்டும்.

குளித்ததும் திருநீறு நெற்றியில் அணிவது ஆரோக்கியத்தைச் சீராக்கும். ஆன்மிகத்திற்கும் வித்திடும்.

No comments:

Post a Comment