AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Saturday, 24 December 2016

வாசி

கேள்வி 
வாசி யோகத்தில் ; இரண்டு நாசி சுவாசம் , இடது நாசி சுவாசம் வலது நாசி சுவாசம் ,  ஒருநாசியில் உள்வாங்கி மறுநாசியில் வெளியிடல்  ஆகியவை ஏன் செய்ய வேண்டும் ?
 நாடி சுத்தி 
, பிராணாயாமம் வாசி யோகம் , வித்தியாசம் என்ன . ?
பதில் 
நாடிகள் என்பது சக்தி ஓட்ட பாதைகள்.  நமது உடலில்  72000  நாடிகள் செயல் படுகிண்றன. 

இவை பத்து பிரதான நாடிகள் மூலம் கட்டு படுத்த படுகின்றன .. இந்த பத்து நாடிகளை மூன்று அதி  முக்கிய நாடிகள் கட்டுபடுத்துகின்றன .  அவை இடகலை பிங்கலை சுழிமுனை அல்லது குரு நாடி. அவற்றுள் சுழிமுனை நாடியை வாசி யோகம் மூலம் நாம் உருவாக்குகிறோம் . 

இடகலை , பிங்கலை  ஆகிய நாடிகள்  நமது இடது நாசி  மற்றும் வலது நாசி துவாரம் வழி  இடதுபக்க செயல்பாடு வலது பக்க செயல் பாடு என  பிரித்து செயல்படுகின்றன .. ஆயினும்   இடகலை என்ற சந்ரகலை 16  நாத கலை சக்தி கொண்டது .   பிங்கலை என்ற  சூரிய நாடி 12 விந்து கலை சக்தி கொண்டது .இதனால் நாத உயிர்சக்தி (positive life energy) மற்றும் விந்து உயிர் சக்தி ( negative life energy )  சமநிலை அடையவில்லை.இதற்காக சுழிமுனை என்ற நாடியை வாசி யோகத்தில் உருவாக்குகிறோம் . இதில் தாரக கலை என்ற 4 கலை சக்தி  (கிடைக்கும் )பெறும் பலம் கொண்டது . . இதனால் இடகலை பிங்கலை சமநிலை பெற்று உடல் இளமையுடன்  அழியாமல்  இருக்கும் .இந்த பிரபன்ச்சத்தில் இருந்து 32 கலை  பெறப்படுகிறது .  இந்த உயிர் சக்தி நமது உடல் முழுவதும் பரவி உடலில் உருவாகும் 64 கலை சக்தியுடன் சேர்ந்து 96 கலை சக்தி உருவாக்கும் . இது அளப்பறி சக்தி . நிலை . இதுவே அணைத்து அபூர்வ சக்திகளுக்கும்  சித்திகளுக்கும் அடிப்படை .. 
.  
சாதரணமாக நாம் இரண்டு நாசியில் சுவாசிக்கிறோம் 
அப்பொழுது நாத கலை !6 விந்து கலை 12 என்ற வித்தியாசத்தால் 4  கலை வீணாகிறது  இதை சமநிலை படுத்த ஒருநாசியில் சுவாசம் அடைபட்டு நிகழும் .அப்பொழுது குறைவான சக்தியே பெறப்படும் . உயர்ந்த சக்தி பெற வாசி யோகா ஆரம்பத்தில் மூச்சை நெறிப்படுத்த துவங்குகிறோம் . முதலில் காலத்தை நெறிபடுத்தி இரண்டு நாசியிலும் சுவாசித்து  வாசி உருவாக்குகிறோம். இவ்விதம் .வாசிபழகுதல்  துயர் தராது 
. 
அதன் பின் நாடிகளை நெறிபடுத்தி வாசியோகம் பழக வேண்டும்.அதற்க்கு 

  • முதலில் இரண்டு நாசியிலும் சுவாசித்து வாசிபழகுதல் வேண்டும்.
  • அதன்  பிறகு வலது நாசியில் யில் வாசி பழக வேண்டும் 
  • அதன்பின் இடது நாசியில் வாசி பழக வேண்டும்  . 
இவை நாடிசுத்தி எனப்படும் .
  • அதன் பின்  வலது நாசியில்  உள்வாங்கி கும்பித்து  இடது வெளியிடல்  
  • அதன் பின்  இடது நாசியில்  உள்வாங்கி கும்பித்து   வலது வெளியிடல்  என வாசி பழகவேண்டும் .
  
இது பிராணயாமம்

 
இப்படி  படிப்படியாக நாசியை பயன்படுத்தி வாசி யோகம்  பழக வேண்டும் .
 அதன் பின் ஆதாரதளங்களில் பிராணாயாமம் செய்வது வாசியோகம் 
பழக வேண்டும்   .

 
இதனால்  பிரபன்ச்சத்தில் பெறும் நாத மற்றும் விந்து சக்திகள் உடலில் நாத விந்து சக்திகளை உருவாக்கி . உடலில் சக்தி சம நிலை உருவாக்கும் . இவிதம்  படிப்படியாக நாடிகளை நெறிப்படுத்தி சக்தி சமநிலை பெறுவதால் மனம் அமைதிஆகி ஒருநிலைப்படும். உடல் உறுதி பெறும் 
.

இப்படி படிப்படியாக வாசி பழகாவிட்டால்  சக்தி சமநிலை கெடும் . 
மூச்சுப்பிடிப்பு மற்றும் துன்பங்கள் வரும் .  

இவ்விதம் படிப்படியாக வாசி பழகுவதால்  உடல் முழுவதும் சக்தி ஓட்டபாதை சீராகும் . அனைத்து அவயவங்களும் சக்தி பெரும் . இதனால் நோய்கள் தீரும். துன்பம் நேராமல் சக்தி பெறுகிறோம் .

No comments:

Post a Comment