கணநாதர் உபாசனா விதி
பிராதக்காலத்தி லெழுந்திருந்து ஸ்நானபானஞ் செய்து
பட்டு வஸ்திரம் அல்லது
நார்மடி அரையில்டுத்தி
விபூதி யணிந்து அனுஷ்டான முதலியதை முடித்து பரிசுத்தமான விடத்தில்
தன்னந்தனியனாய்
வீற்றிறுந்து யாதொரு
சிந்தனாவஸ்தையுமின்றி அடியிற் கூறியவாரு
தியானஞ்செய்து சக்ரமெழுதி பூஜையில்
வைத்து தூபதீபங் கொடுத்து மூல மந்திரத்தை ஜெபிக்கவும்.
விக்னேஸ்வரர் மந்திரம்
ஓங் றீங் அங் உங் சிங்
கணதேவாய நம,சகல
துரிதபூத வாதைகளும்
நசிமசி 11 நாள் உரு
1008- ஜெபிக்கவும்
சித்தியாம்.
ஓரு வெற்றுலையில்
அல்லது உன்ளங்கையில் விபூதி
பரப்பி அதில் இச்சக்கரத்தை ஐங்கோணமாய்க் கீறி
அதிற் பீஜாசட்ரங்களை
வரைந்து அதைச்
சுற்றிலும் ஓங்காரத்தைப் போட்டு
மூலமந்திரஞ் செபிக்க
சகல காரியங்களுஞ்
ஜெயமாம். பல நோய்களும் அகலும்.
பூஜை விவரம்
செம்பு அல்லது மண்
கலத்தில் சுத்தமான ஜலம் சுத்தியாய் மொண்டுவந்து அதில்
மாவிலைக்கொத்து
போட்டு கும்ப வஸ்திரங்கட்டி மஞ்சள்
குங்குமம் அட்சதை புஷ்பஞ் சாத்தி அதன்முன் வாழையில்
போட்டு அதில் தாம்பூல
பழம் தேங்காய் புஷ்பம்
சந்தனம் பரமான்னம்
வைத்து சூடஞ் சாம்பிராணி முதலிய
தூபதீபங்கொடுத்து
செய்ய வேண்டியது.
கணபதி மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே
ஐயும் கிலியும் சவ்வும்
கணபதி வசி வசி சுவாகாவென்று உரு
1008-ஜெபிக்கவும்
சித்தியாம்.
இதன் பலன்
குழந்தைகளுக்கும
பெரியவர்களுக்கும்
சேர்ந்த பயம்,காத்து,
சோகம்,மந்தம்
முதலியவைகளால்
உணடாகும் சுரம் பல தோஷங்கள்
சிரசிலுண்டாகும்
செவ்வாப்பு கட்டிகள்
தெற்கத்தி நோய்,இழுப்பு வலிப்பு
முதலியவைகளுக்கு
மேற்படி கணேசரைப்
பூஜை செய்து 108
உருவரையில் ஜெபித்து கும்ப தீர்த்தம் மூன்று
தரம் கொஞ்சம் அருந்தக் கொடுத்து விபூதி பூசிக்கொண்டுவரவும்
சகல வினைகளும் பற்றந்து சௌக்கியப்படும்.
No comments:
Post a Comment