பொதுவாக மாந்திரிகத்தால் செய்யபடுகின்ற பில்லி சூனியத்தை பற்றி மக்கள் பல நேரங்களில் பேசுகிறார்கள் சில மந்திரவாதிகளும் அந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள் அப்படி என்றால் என்ன? அதன் உண்மையான பொருள் என்ன என்பது பற்றி பலருக்கும் தெரியாது. குறிப்பாக ஏவல், சூனியம் என்பதை கூட சிறிது விளங்கி கொள்ள முடிகிறது. பில்லி என்பதை பற்றி அதிகமாக புரிந்துகொள்ள முடியவில்லை எனவே அவைகளை சிறிது விளக்க முடியுமா என்று என்னிடம் கேட்கிறார்கள் அவர்களுக்கு விளக்கம் தரவேண்டியது எனது கடமை என்று நினைக்கிறேன் அந்த கடமையே செய்து முடித்த பிறகே மாந்திரிகத்தை பற்றிய முழுமையான தகவல்களை கொடுத்தால் நன்றாக இருக்குமென்றும் கருதுகிறேன்.
பில்லி என்ற வார்த்தை வடமொழியிலோ தமிழிலோ கிடையாது இந்த வார்த்தை புத்தர் பேசிய பாலி மொழியில் உள்ளதாகும் இதற்கு நேரடியான பொருள் கட்டுபடுத்துதல் என்று சொல்லலாம் அதாவது மந்திர சக்தி அல்லது சித்தி பெற்ற ஒருவர் ஒரு சாதாரண மனிதனை உடல் ரீதியிலும் மன ரீதியிலும் செயல் ரீதியிலும் ஈர்த்து கட்டு படுத்துவதே பில்லி ஆகும். அதாவது பில்லி மந்திரம் கற்ற ஒரு மந்திரவாதி ஒருவனை மன நோயாளியாக ஆக்கிவிட முடியும். நல்ல ஆரோக்கியமுள்ளவரை நோயாளியாக படுக்கையில் தள்ளிவிடவும் முடியும். ஒருவனது, செயல்களை தலைகீழாக மாற்றி தோல்விகளை மட்டுமே அவன் பெறும்படி செய்துவிடவும் முடியும். இது தான் பில்லி என்பதன் விரிவாக்கம்.
அடுத்ததாக சூன்யம் என்ற வார்த்தை வருகிறது. இது வடமொழி சொல் என்பது எல்லோருக்கும் தெரியும். சூன்யம் என்றாலே வெறுமை என்பது பொருளாகும். செல்வந்தனான ஒருவனை ஒன்றுமே இல்லாத வறியவனாக நடுத்தெருவில் நிறுத்துவதன் மந்திர பெயரே சூன்யம் என்பதாகும். இந்த சூன்ய மந்திரத்தால் எவரை வேண்டுமானாலும். அழித்து விடலாம் கைகால்களை முடக்கி விடலாம் சம்மந்த பட்டவருக்கு தெரியாமலே வயிற்றில் வசிய மூலிகைகளை செலுத்தி விடலாம் கருவில் உள்ள குழந்தயை கூட கொன்றுவிடலாம்.
தனக்கு கீழே உள்ள ஒருவனை இந்த வேலையை செய் என்று சொல்வது எவலாகும். அதே போன்றது தான் மாந்திரிகத்தில் உள்ள ஏவல் முறையாகும் மந்திர சக்தியால் மந்திரவாதியின் கட்டுபாட்டுக்குள் இருக்கின்ற சில தீய சக்திகளை எதிரிகளின் மீது ஏவி விட்டு அவர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவதே ஏவல் மந்திரத்தின் முக்கிய உறுப்பாகும் இந்த மந்திரத்தின் மூலம் ஒருவரது மூளையை முற்றிலுமாக நமது கைவசப்படுத்தி அவரை நமது ஏவலாளாக ஆக்கிவிடவும் முடியும்.
இதே போல மாந்திரிகத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் என்னொரு வார்த்தை செய்வினை என்பதாகும். தனது சொந்த விருப்பத்தின் படி செயல்பட்டு கொண்டு லாபத்தையும். வெற்றிகளையும் அநுபவத்தி வரும் ஒருவனை மந்திரங்களால் தடுத்து அவன் மனதை பல வழிகளில் திசை திருப்பி விட்டு கடேசியில் அவனை படுகுழியில் தள்ளுவதே செய்வினையின் முக்கிய செயலாகும் இதன் மூலம் ஒருவனின் பொருளாதாரத்தையும் அழிக்கலாம் ஆரோக்கியத்தையும் நீர்த்து போக செய்யலாம்.
அடுத்ததாக உள்ளது வைப்பு என்பதாகும். இது மந்திர வழியிலோ மருத்து வழியியோ ஒரு பொருளை உண்ண கொடுத்து அல்லது அவர்களின் ஆடையில் உடம்பில் தடவி விட்டு அவர்களை வசிய படுத்துவதே வைப்பு என்பதன் அர்த்தமாகும்
No comments:
Post a Comment