AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Saturday, 27 June 2020

சகலவித நவகிரக தோஷங்களுக்கும்

சகலவித நவகிரக தோஷங்களுக்கும் 

மந்திரம் :- ஓம் க்லீம் ஸ்ரீம் ஐம் றீம் ஹ்ரீம் ஹ்ரெளம் ஹீம் நவக்ரஹ தேவதாய சர்வ கிரஹ தோஷாம் நிவாரய நிவாரய ஸ்வாஹா"

வெள்ளித் தகட்டில் எந்திரம் எழுதி சர்வதேவதா வசிய மை தடவி சுத்த பூஜை செய்து தூப தெய்வத்துடன் மேற்கண்ட மந்திரத்தை 108 உரு ஜெபித்து தாயத்தில் போட்டு அணிய அனைத்து நவக்கிரக தோஷங்களும் சாந்தமாகி விடும் 
நவ கிரகத்துக்கு  ஒன்பது தீபம் போட சொல்லவும் நேரம் சரியில்லை புலம்புவார் செய்து பலனடையலாம் 

நன்றி 
துலாம் வெற்றிவேல் ஆம்பூர்  7010053596

Wednesday, 17 June 2020

நமது வீட்டில் தெய்வ சக்தியை நிலைநிறுத்த ஹோமம் பரிகார பூஜை முறை. பழங்காலத்து முறை



குடும்பத்தில் நிம்மதி இல்லையா
வருமானம் இல்லையா
தொழில் அமையவில்லையா
குடும்பத்தில் எப்பொழுதும் சண்டை சச்சரவு குழப்பத்தில் உள்ளீர்களா
லட்சுமி கடாட்சம் இல்லையா
கடவுள் அனுக்கிரகம் இல்லையா
குலதெய்வம் உங்கள் இல்லத்தில் இல்லையா
இவை அனைத்திற்கும் ஒரு பூஜை முறை உள்ளது ஒரு நல்ல புரோகிதர் வைத்துக்கொண்டு இந்த பூஜையை உங்கள் இல்லத்தில் செய்து அனைவரும் நலம் பெற வேண்டுகிறோம்
பூஜை முறை
மூன்று கழுதையின் கோமியத்தை பிடித்து வீட்டிற்கு வெளியே ஏதாவது ஒரு இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்

பிறகு ஏழு பசு கன்று குட்டியின் கோமியத்தை சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
பிறகு ஏழு கிணற்று நீர் சேகரித்து ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்
அத்துடன் மூன்று நதிகளின் நீர் 3 குளத்தின் நீர் மூன்று ஏரியின் நீர்
இவை அனைத்தும் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும் பிறகு
அங்கு தரமான நவரத்தினக் கற்கள் ஒன்பது கற்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும் பிறகு
108 தாமரை மலர்கள் கிடைத்தால் வாங்கிக் கொள்ளவும் இல்லையென்றால் இருபத்தி ஒரு மலர்கள் அதுவும் கிடைக்கவில்லை என்றால் ஏழு மலர்கள் கட்டாயம் வாங்க வேண்டும் மல்லிகை பூ அர்ச்சனை வாங்கிக் கொள்ளவும்

வியாழன் இரவு கழுதையின் கோமியத்தை உங்கள் வீட்டின் எல்லா இடங்களிலும் தெளிக்க வேண்டும் பிறகு வீட்டை பூட்டிவிட்டு உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டில் வந்து இரவு தங்கிக் கொள்ளவும்
மறுநாள் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது 4 மணி அளவில் எழுந்து வீட்டை நன்கு கழுவி விட வேண்டும்
பிறகு உங்கள் வீட்டில் ஹாலில் ஒரு அடி விட்டத்தில் ஒரு வட்டம் வரைந்து அங்கு ஒரு அடி ஆழம் அளவிற்கு ஒரு பள்ளம் எடுக்கவும் அந்த பள்ளத்தை சுற்றி அறுகோண வடிவில் ஒரு ஹோம குண்டம் தயார் செய்யவும்
நவகிரகங்களுக்கு உண்டான நவ தானியங்களும் நவபாஷாணங்கள் மற்றும் நவகிரக சமித்துக்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும்

ஒரு புதிய சில்வர் கூடத்தில் நீங்கள் சேகரித்து வைத்த அனைத்து நீர்களும் அதில் சேர்க்கவும் அத்துடன் வாசனை பொடிகளும் 8 எலுமிச்சை பழங்களும் சேர்த்தது கலசம் தயார் செய்யவும் பிறகு உங்கள் பூஜை அறையில் ஒன்பது கிரகங்கள் இருக்கும் இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் அந்தந்த கிரகத்திற்கு உண்டான கற்களை தேன்மெழுகு விட்டு மூடவும் பிறகு தயார் செய்த கலசத்தை பூஜை அறையில் வைத்து கலசத்தில் இருந்து நூல் மூலம் நீங்கள் தயார் செய்த ஹோம குண்டத்தை சுற்றவும்
பிறகு வீட்டில் கணபதி பூஜை அடுத்து லட்சுமி பூஜை அடுத்து நவக்கிரக பூஜை ஹோமம் வளர்த்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்
அந்த கலசத்தில் உள்ள நீரை மூன்று நாட்களுக்கு பிறகு எடுத்து வீட்டில் உள்ள அனைவரும் சிறிது சிறிது பருகி மீதமுள்ள நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்

ஹோம குண்டம் வளர்த இடத்தில் அந்த சாம்பலை அதே குழியில் போட்டு மூடிவிடவேண்டும்
ஓமம் வளர்த்து முடித்த அந்த நாளில் இருந்து தொடர்ந்து 21 நாட்கள் வீட்டில் விளக்கு அணையாமல் எரிய விட வேண்டும்
கலசத்தில் உள்ள 8 எலுமிச்சை கனிகளும் வீட்டின் எட்டு திசையிலும் புதைக்க வேண்டும் இந்த இடங்களில் மலர்கள் தூவி ஒரு மண் குடுவையில் எலுமிச்சம் கனியை வைத்து அந்த திசைக்கு உண்டான தேவதையை வணங்கி எலுமிச்சை கனியை புதைக்க வேண்டும்

இந்த 21 நாட்களும் உடலுறவு மற்றும் தீட்டாகி விடுதல் மற்றும் இறுதி அஞ்சலிக்கு செல்லுதல் போன்றவை கூடாது 21 நாட்களும் கட்டுப்பாடுடன் கடவுளை வணங்கி வரவேண்டும்

இந்தப் பூஜையை போல் செய்தாள் நீங்கள் உங்கள் இல்லத்தில் தெய்வங்கள் குடிகொள்ளும் மேலும் அந்த தெய்வம் உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு நவகிரக கட்டுவோம் வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு அஷ்டதிக் கட்டும் போடப்பட்டிருக்கும் அதனால் உங்கள் இல்லத்திற்கு எப்பொழுதும் எந்த ஒரு கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் போன்றவை அணுகாது அப்படி அதை மீறி யாராவது ஏவல் செய்தால் அது மீண்டும் திரும்பி செய்த வினையை தாக்கும் இந்த பூஜை முறை பழங்கால பாரம்பரிய பூஜை முறையாகும்
இந்த பூஜை செய்பவர்கள் யாருக்காவது சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்புகொள்ள நன்றி சிவாயநம

புது கணக்கு போட

திங்கள் புதன் வியாழன் ஆகிய நாட்கள் நல்லது
துவிதியை திருதியை பஞ்சமி சஷ்டி சப்தமி தசமி ஏகாதசி துவாதசி திரயோதசி ஆகிய திதிகள் நல்லது
அஸ்வினி ரோகிணி மிருகசீர்ஷம் திருவாதிரை புனர்பூசம் பூசம் உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் சுபம்
ரிஷபம் மிதுனம் சிம்மம் துலாம் மீனம் ஆகிய லக்னம் ஏற்றது

மேற்சொன்ன கிழமை திதி நட்சத்திரம் லக்னம் இவை நான்கும் ஒரே நாளில் வந்தால் அவை மிக மிக உத்தமம்

பூணூல் அணிய

யஜூர் வேதத்தை பின்பற்றுவோர் ஆவணியில் பௌர்ணமியிலும்
ரிக் வேதத்தை பின்பற்றுவோர் விநாயகர் சதுர்த்தியும் அஸ்தம் நட்சத்திரத்தில் பூணூல் அணிய லாம்.

மருந்து உண்ண

ஒரு வியாதிக்கு முதன்முதலில் மருந்து உன்ன செவ்வாய்க் கிழமையும் சனிக்கிழமையும் ஆகாது இந்த இரண்டு நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் மருந்து உண்டால் உடனடியாக நோய் குணமாகும்

மந்திர விபூதி செய் முறை

5 வரட்டி ஆகும் அளவிற்கு பசும் சாணத்தில் ஒருபிடி வில்வ இலை ஒரு பிடி கண்டங்கத்திரி இலை ஒரு பிடி தும்பை இலை ஒரு பிடி கருஊமத்த இலை மேலும் ஒரு பிடி கொன்றைமலர் இருந்தால் சேர்த்துக் கொள்ளவும் மேலும் கற்பூர வில்வம் மற்றும் மகாவில்வம் இருந்தால் சேர்த்துக்கொள்ளவும் மேலும் ஒரு பிடி சுத்தமான ஆல இலை சுத்தமான அரச இல்லை சேர்த்துக்கொள்ளவும் இத்துடன் ஒரு பிடி அளவிற்கு தர்ப்பைப்புல் சேர்த்து பசும் சாணத்தில் கலந்து வரட்டி தட்டவும் ஐந்து நாட்கள் நன்றாக வெயிலில் காய வைத்து புது சட்டி வாங்கி  அதில் அனைத்தும் போட்டு எரிய விட்டு சுத்தமான சாம்பலை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் அத்துடன் கீழ் உள்ள பொருட்கள் சேர்க்கவும்

ஜவ்வாது 5 கிராம்
பச்சைக் கற்பூரம் 5 கிராம்
குங்குமப்பூ ஒரு கிராம்
ஏலக்காய்-2
கிராம்பு 2
ஜாதிபத்திரி 5 கிராம்
நவபாஷாணம் அனைத்தும் சேர்த்து 1 கிராம்
ஒரிஜினல் புனுகு ஒரு கிராம்
ஒரிஜினல் அம்பர் ஒரு கிராம்
ஒரிஜினல் கோரோசனை ஒரு கிராம்
ஒரிஜினல் கஸ்தூரி ஒரு கிராம்
சுத்தமான அர்த்தர் 5ml
சுத்தமான பன்னீர் 150 ml

5 கிராம் அளவிற்கு கொஞ்சம் பஞ்சகவியம் இவை அனைத்தும் பொடிசெய்து சாம்பலுடன் கலந்து நன்றாக காய வைக்க வேண்டும் பிறகு ஒரு மெல்லிய காட்டன் துணியில் கொட்டி ஜலிக்க வேண்டும் ஜொலித்து வரும் சுத்தமான விபூதியை புதிதாக ஒரு வெள்ளை மெல்லிய காட்டன் துணியில் இந்த விபூதியை கொட்டி ஏதாவது ஒரு பழைய சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள சிவலிங்கத்திற்கு நாம் கொண்டு செல்லும் துணி பையுடன் விபூதியை லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும் அப்படி செய்து சேகரித்த புனிதமான அந்த விபூதியை ஒரு வில்வ குடுவிலோ அல்லது செம்பு பாத்திரத்திலோ சேகரித்து கீழ்வரும் மந்திரத்தை 10 ஆயிரத்து எட்டு தடவை ஜெபிக்க வேண்டும் மந்திரம் ஜெபிக்கும் பொழுது இந்த விபூதியை நம் கையில் வைத்துக் கொண்டு வடக்கு முகமாக அமர்ந்து மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்
ஓம்  ஸ்ரீம் க்ரீம் ஹ்ரீம் க்லீம்  க்லௌம்  நமசிவய- யநமசிவ-வயநமசி-சிவயநம-மசிவயன எனக்கு அனைத்தும் வசி   வசி சிவ சிவ ஸ்வாக 

இந்த மந்திரத்தை ஒருமுகமாக 10008 தடவை ஜெபித்து பிறகு விபூதியை நாம் தினமும் வைத்துக்கொண்டு சென்றாள் நாம் நினைக்கும் அத்தனை விஷயங்களும் நடக்கும் காரியசித்தி 100% நடக்கும் மேலும் சிவனின் அருள் ஆசி பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் நன்றி சிவாய நம


குழந்தை வேண்டி கடலில் நீராடுதல்

செவ்வாய் வெள்ளி சனிக் கிழமை கடலில் நீராடக் கூடாது அமாவாசை பவுர்ணமி மாதப்பிறப்பு கூடாது.

நல்ல பிள்ளையை பெற

வேத சாஸ்திரங்களில் கூறப்பட்ட நல்ல நேரத்தில் புண்ணிய தீர்த்தங்களில்லாலும் கோமியம் வாசனை திரவியம் சந்தனம் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட சுத்தமான மனமகிழ்ச்சியோடு 108 முறை சுதர்சன மந்திரத்தையும் பகவானை தியானித்து கணவனும் மனைவியும் சம்போகம் செய்தால். உத்தமமான ஆண் குழந்தையை பெற லாம் மாதம் ஒன்றுக்கு இரண்டு முறை மட்டும் மனைவியுடன் சேர்தல் உடலுறவுக்கு நல்லது.

பெண் குழந்தை பிறக்க

மாத விலக்கான நாள் முதல் 5 7 9 11 13 15 ஆகியவற்றை நாட்களில் சேர்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்

ஆண் குழந்தை பிறக்க

பெண்ணுக்கு மாதவிடாய் ஆன நாள் முதல் 6 8 10 12 14 16 வது நாட்களில் கூடினால் ஆண் குழந்தை பிறக்கும்

குளிகை காலம்

ஒவ்வொருநாளும் குளிகை காலத்தில் எண்ணை தேய்த்து குளிக்க புதிய ஆபரணங்கள் அணிய புதுமனை குடி புக யாகம் வளர்க்க அறுவடை செய்ய மருந்து உட்கொள்ள சாஸ்திரம் வாசல்கால் நிறுத்த மிகவும் நல்லது.

கூடாத நட்சத்திரங்கள்

பரணி கார்த்திகை திருவாதிரை ஆயில்யம் பூரம் பூராடம் பூரட்டாதி கேட்டை விசாகம்  சித்திரை சுவாதி மகம் இந்தப் பன்னிரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் பணம் கொடுத்தால் திரும்ப வராது பிரயாணம் செய்தால் திரும்பி வரமாட்டார் வியாதியில் படுக்கையில் படுத்தால் தரமாட்டார்

செவ்வாய் தோஷம்

ஆண் பெண் ஜாதகங்களில் லக்னத்திற்கு 2 4 7 8 12ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும் ஒருவருக்கு தோஷம் இருந்தால் மற்றவருக்கு மேற்கூறிய ஏதாவது ஓரிடத்தில் தோஷம் இருக்க வேண்டும் அதுதான் தோஷசாம்ய எனப்படும்.
தோஷம் சமமாக உள்ளது எனப்படும் இவற்றிலும் சில விதிவிலக்கு உண்டு அவையாவன
சிம்மம் மகரம் கடகம் மேஷம் விருச்சிகம் தனுசு மீனம் இந்த ஏழு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு தோஷமில்லை
மேஷம் விருச்சிக லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை
ரிஷபம் துலாம் லக்னத்திற்கு நான்கில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை

கன்னி மகர லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை
மிதுனம் கன்னி லக்னத்திற்கு பன்னிரண்டில் செவ்வாய் இருந்தால்
செவ்வாயை சனி சூரியன் குரு புதன் வளர்பிறை சந்திரன் பார்த்தால் தோஷம் இல்லை
குருவுடன் இணைந்தால் தோஷம் இல்லை
சுக்கிரன் நீசமாகவோ அல்லது அஸ்தமனமாகவோ இருக்கும் காலங்களில் திருமணம் செய்யக்கூடாது

விவாக விஷயம்

ஒரே முகூர்த்தத்தில் ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரண்டு பெண்களுக்கு விவாதம் செய்யக் கூடாது
செய்ய வேண்டிய அவசியம் நேரிட்டால் ஆற்றுக்கு இரண்டு கரைகளில் வைத்து தம்பி தமையனுக்கு விவாகம் செய்து ஆறு மாதம் வரை தங்கை தமக்கைகளுக்கு விவாகம் கூடாது
பெண்ணுக்கு முந்தி விவாகம் செய்து பிறகு பிள்ளைக்கு செய்யலாம்

ஒரு முகூர்த்தத்தில் இரண்டு பெண்களுக்கு விவாகம் செய்யக்கூடாது
90 நாளைக்கு பிறகு செய்யலாம் அவசியம் 90 நாளைக்குள் செய்ய வேண்டி வந்தால் இரண்டு வீடுகளில் உபாத்தியார் ஐ கொண்டு தனித்தனியே விவாகம் செய்யலாம்
பங்குனியில் பையணுக்கும் விவாகம் செய்து சித்திரையில் பெண்ணுக்கு செய்யக்கூடாது ஒரு நாளைக்கு மேல் செய்யலாம்.

கடந்த பின்பு எத்தனை நாள் கழித்து இன்னொரு சுப காரியம் செய்யலாம்?

பொதுவாக ஒரு வீட்டில் ஒருவனுக்கு உபநயனம் முடிந்து ஒரு மாதத்துக்குள் இன்னொரு உபநயனம் செய்யக்கூடாது வீட்டுக் கூரை வேய்வதோ முடி வெட்டிக் கொள்வதோ கூடாது இறந்தவர்களுக்கு பிண்டம் போடலாம் ஆனால் சென்று சுய சிரார்த்தம் செய்யக்கூடாது

Wednesday, 3 June 2020

கிரகங்களும் காரகத்துவங்களும்:

கிரகங்களும் காரகத்துவங்களும்:

சூரியன்
 தந்தை, மகன், அரசன், பிரதமர், ஜனாதிபதி, நிர்வாகி, முதல்வர், அரசு. அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆன்மா, கடவுள், பெயர் & புகழ், வெளிச்சம், தலைநகரம், அதிகாரம், அரண்மனை, வலது கண்,வலது பக்கம், ஹவுஸ் வலது பக்க ஜன்னல்.

சந்திரன்
 அம்மா, பெண், மாமியார், மனைவி, கலைஞர்கள், ஹோட்டல் தொழில், பால் பண்ணை, ஆடம்பரமான பொருட்கள்,பயனங்கள், விவசாயம், கவிதை மற்றும் கட்டுரை எழுதுதல், மளிகை கடை, மருத்துவ கடை, மார்பகம், வயிறு, சிறுநீர் பாதை, இடது கண், வீட்டின் இடது பக்க ஜன்னல்,குளியல் அறை & மலசலம் கழிக்கும் இடம், தண்ணீரால் நிரம்பிய இடங்கள், கடல், ஏரி, ஆறு, மனம், இடப்பெயர்ச்சி, இடம் மாற்றம், குங்குமம், கலை, திரவ பொருட்கள், உணவு பொருட்கள், மேகங்கள், மழை,திருடன், விபச்சாரம், செய்தி, இயக்கம், ஒளி,திருட்டுத்தனமான செயல்பாடுகள், ஜோதிடம்,வேதங்கள், மருத்துவம், துணிகள்.

செவ்வாய் (குஜன்)
 2ம் இளைய சகோதரர், கணவன், போலீஸ், பாதுகாப்பு படை, பொறியாளர், விளையாட்டு வீரர், தொழிற்சங்க தலைவர்,அறுவ சிகிச்சை மருத்துவம், விவசாயம், புருவம், பற்கள், இரத்தம், இதய பகுதி, விந்து, எலும்பு மஜ்ஜை,மூக்கு பாலம்,படுக்கையறை, அடுப்பு, ஆற்றல் மீட்டர், மின்மாற்றி, மின் மோட்டார்ஸ், ஹீட்டர்கள், கற்கள், தூண்கள், வீட்டு விட்டங்கள், பூமி, மலைத் தொடர், மலை, பாறைகள், சுரங்கங்கள், உலோகங்கள், ஈட்டி, தோட்டாக்கள், எதிரி, வன் பொருள், கத்தரிக்கோல், முக்கோண வடிவம், சக்தி, ஊசி, கத்தி, முள், அம்பு, இயந்திரங்கள், ஆயுதங்கள், விவசாயம்.

புதன்
மாமா, மாமனார், 3ம் இளைய சகோதரர், பெண் நண்பர்கள், பாய் நண்பர், இளம் சகோதரி, மனைவி, வணிகம் மற்றும் வர்த்தகம், புத்தக விற்பனை மற்றும் பதிப்பு, கணக்காளர், கணக்காய்வாளர், கவிஞர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், ஜோதிடம், பெயிண்டர், வழக்கறிஞர், ஆசிரியர், பேராசிரியர், விரிவுரையாளர்,விஞ்ஞானிகள், ஆராய்ச்சி பொறியாளர், மளிகை கடை, கைகள், கழுத்து, தோள், தோல், நெற்றி, மொழி, தொண்டை, சுவர் பிளாஸ்டரிங், பார்வையாளர் அறை, படிக்கும் அறை, கார்டன், பூங்கா, நிலம், கல்வி, வர்த்தகம், அழகு, புதைசேற்று சுவர்கள், பயிர்கள், இலைகள், தகவல், பதிவு, பேச்சு, சொற்றிரம், அறிவு, செயல்பாடு, எண்ணங்கள், தந்திரங்கள், ராஜதந்திரம், தந்திரம், மென்மையான விஷயங்கள், மண்,

வியாழன் (குரு)
ஜீவகாரகர் (சொந்தம்), தொப்பை (குடல் பகுதி), மூக்கு, கொழுப்பு,தொடை, பாதம், பறிப்பு,வீட்டின் கடவுள் அறை, நீதிபதி, வழிகாட்டி, ஆசிரியர், தொகுப்பாளர், கல்வி அமைச்சர், மேலாளர், வழக்கறிஞர், கணக்காளர், தணிக்கையாளர், வேதங்கள், கோயில்கள், தத்துவம், தேன், கடவுள், மாடு, கௌரவம்,பெருமரியாதை, மரியாதை,உண்மை,பொறுமை, அடக்கம்.

சுக்கிரன்
 சகோதரி,மனைவி,மகள்,மைத்துனி,விபச்சாரி,விந்து,பெண்ணுருப்பு, கருப்பைகள், கன்னம், இதயம், சமையலறை, இசை, நடனம், நடிப்பு, ஃபேன்சி ஸ்டோர்ஸ், நிதி, வங்கி, பாடல், நகை கடை, பணக் கடன், மது கடை, கால்நடை துறை,துணி வியாபாரி, அன்பு, கவிதைகள், பூ, உடலுறவு, திருமணம், வீடு, இன்பம், வாகனங்கள், ஆடம்பரம், வாசனை, செல்வம், மயக்குதல், சுந்தரமானது, இனிப்பு, போதை, அழகான தோற்றம், அழகு, இரகசிய விடயங்கள், நடனம் அரங்கு, சினிமா திரையரங்கு, மகளிர் குழு.

சனி
 மூத்த சகோதரர், அடிமைத்தனம், குறைந்த ஊதியம் வேலைக்காரன், தொழில்,கேரியர், வேலை, சின், பாதம், பிட்டம், ஆசனவாய்,முட்டிகள், முழங்கால், செரிமானபை, வீட்டின் சேமிப்பு அறை, டைனிங் ஹால்,சாலை,காற்று சம்பந்தமான நோய்கள்,உல்லன் துணிகள்,இரும்பு,ஈயம், சுழல் காற்று, புயல், செங்கல் சூளையாளர், சூதாட்டம்,எண்ணெய் சுரங்கம்.

ராகு
 தந்தைவழி தாத்தா, வெளிநாட்டு பயணங்கள்,மின்னணுவியல், வான் பயணவியல்,நடிகர், புகைப்படம் எடுத்தல், சிபிஐ அதிகாரி,பாதுகாப்பு, கடத்தல், திருடன், வாய், தலை, காது,உதடுகள், குடல், மலக்குடல், விரைகள், முதன்மை நுழைவாயில்,பழைய வீடு, பாழடைந்த சுவர்,, சுவற்றில் விரிசல், இருண்ட அறை, பெரிய மண்டபம், கோபுரம்,முட்டை வடிவம், தனிமையான பகுதி,பரந்த சாலை, சுற்று வட்டம்,வட்ட வடிவம், இருள்,உடல்நலத்தை கவனிப்பு,மாயத்தோற்றம், மாயை, நிழல், குடை, சக்கர வடிவம்,சக்கரத்தின் சுற்றளவு, , விளையாடும் இடம், பெரிய அளவு,மொட்டை மாடி, மரங்களின் மேல் பரப்பு, காய்ந்த மரம்,ரப்பர், பிளாஸ்டிக், உலர்ந்த தோல், கிடங்கு, காபி கொட்டை, கயிறு, பாம்புகளின் இறைவன்,ஊழல், விபத்துகள், இரைப்பை தொல்லைகள், பாம்பின் வாய்.

கேது :
தாய்வழி தாத்தா, முடி, பிறப்புறுப்புகள், நரம்புகள், ஆசனவாய், தாடி, மாடி படிக்கட்டு, புகைபோக்கி, பின் வாசல், குறுகிய சந்து (அல்லது) அறை, குளியலறை, ஜோதிடம், மதம், மறைபொருள் ஆய்வு, கோவில், சட்டம்,நூல், மது, செயல் தடை, இரகசிய நடவடிக்கை, தீர்வு, மண் பானை, காவி துணி, பிரம்மா,சமுத்திரம், மருத்துவமனைகள், பிரார்த்தனை கூடங்கள், மரங்களின் வேர், பாம்பின் வால், கயிறு, சங்கிலி, ஈனைய வலை, சாக்கடை, காய்ந்த புல், மூலிகைகள், யானை உடற்பகுதி, ஆலமரம், எழுதுதல், கொடி, இரகசியம், சர்ச்சை, வழக்கு, தடைகள்.