AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Wednesday, 17 June 2020

நமது வீட்டில் தெய்வ சக்தியை நிலைநிறுத்த ஹோமம் பரிகார பூஜை முறை. பழங்காலத்து முறை



குடும்பத்தில் நிம்மதி இல்லையா
வருமானம் இல்லையா
தொழில் அமையவில்லையா
குடும்பத்தில் எப்பொழுதும் சண்டை சச்சரவு குழப்பத்தில் உள்ளீர்களா
லட்சுமி கடாட்சம் இல்லையா
கடவுள் அனுக்கிரகம் இல்லையா
குலதெய்வம் உங்கள் இல்லத்தில் இல்லையா
இவை அனைத்திற்கும் ஒரு பூஜை முறை உள்ளது ஒரு நல்ல புரோகிதர் வைத்துக்கொண்டு இந்த பூஜையை உங்கள் இல்லத்தில் செய்து அனைவரும் நலம் பெற வேண்டுகிறோம்
பூஜை முறை
மூன்று கழுதையின் கோமியத்தை பிடித்து வீட்டிற்கு வெளியே ஏதாவது ஒரு இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்

பிறகு ஏழு பசு கன்று குட்டியின் கோமியத்தை சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
பிறகு ஏழு கிணற்று நீர் சேகரித்து ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்
அத்துடன் மூன்று நதிகளின் நீர் 3 குளத்தின் நீர் மூன்று ஏரியின் நீர்
இவை அனைத்தும் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும் பிறகு
அங்கு தரமான நவரத்தினக் கற்கள் ஒன்பது கற்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும் பிறகு
108 தாமரை மலர்கள் கிடைத்தால் வாங்கிக் கொள்ளவும் இல்லையென்றால் இருபத்தி ஒரு மலர்கள் அதுவும் கிடைக்கவில்லை என்றால் ஏழு மலர்கள் கட்டாயம் வாங்க வேண்டும் மல்லிகை பூ அர்ச்சனை வாங்கிக் கொள்ளவும்

வியாழன் இரவு கழுதையின் கோமியத்தை உங்கள் வீட்டின் எல்லா இடங்களிலும் தெளிக்க வேண்டும் பிறகு வீட்டை பூட்டிவிட்டு உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டில் வந்து இரவு தங்கிக் கொள்ளவும்
மறுநாள் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது 4 மணி அளவில் எழுந்து வீட்டை நன்கு கழுவி விட வேண்டும்
பிறகு உங்கள் வீட்டில் ஹாலில் ஒரு அடி விட்டத்தில் ஒரு வட்டம் வரைந்து அங்கு ஒரு அடி ஆழம் அளவிற்கு ஒரு பள்ளம் எடுக்கவும் அந்த பள்ளத்தை சுற்றி அறுகோண வடிவில் ஒரு ஹோம குண்டம் தயார் செய்யவும்
நவகிரகங்களுக்கு உண்டான நவ தானியங்களும் நவபாஷாணங்கள் மற்றும் நவகிரக சமித்துக்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும்

ஒரு புதிய சில்வர் கூடத்தில் நீங்கள் சேகரித்து வைத்த அனைத்து நீர்களும் அதில் சேர்க்கவும் அத்துடன் வாசனை பொடிகளும் 8 எலுமிச்சை பழங்களும் சேர்த்தது கலசம் தயார் செய்யவும் பிறகு உங்கள் பூஜை அறையில் ஒன்பது கிரகங்கள் இருக்கும் இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் அந்தந்த கிரகத்திற்கு உண்டான கற்களை தேன்மெழுகு விட்டு மூடவும் பிறகு தயார் செய்த கலசத்தை பூஜை அறையில் வைத்து கலசத்தில் இருந்து நூல் மூலம் நீங்கள் தயார் செய்த ஹோம குண்டத்தை சுற்றவும்
பிறகு வீட்டில் கணபதி பூஜை அடுத்து லட்சுமி பூஜை அடுத்து நவக்கிரக பூஜை ஹோமம் வளர்த்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்
அந்த கலசத்தில் உள்ள நீரை மூன்று நாட்களுக்கு பிறகு எடுத்து வீட்டில் உள்ள அனைவரும் சிறிது சிறிது பருகி மீதமுள்ள நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்

ஹோம குண்டம் வளர்த இடத்தில் அந்த சாம்பலை அதே குழியில் போட்டு மூடிவிடவேண்டும்
ஓமம் வளர்த்து முடித்த அந்த நாளில் இருந்து தொடர்ந்து 21 நாட்கள் வீட்டில் விளக்கு அணையாமல் எரிய விட வேண்டும்
கலசத்தில் உள்ள 8 எலுமிச்சை கனிகளும் வீட்டின் எட்டு திசையிலும் புதைக்க வேண்டும் இந்த இடங்களில் மலர்கள் தூவி ஒரு மண் குடுவையில் எலுமிச்சம் கனியை வைத்து அந்த திசைக்கு உண்டான தேவதையை வணங்கி எலுமிச்சை கனியை புதைக்க வேண்டும்

இந்த 21 நாட்களும் உடலுறவு மற்றும் தீட்டாகி விடுதல் மற்றும் இறுதி அஞ்சலிக்கு செல்லுதல் போன்றவை கூடாது 21 நாட்களும் கட்டுப்பாடுடன் கடவுளை வணங்கி வரவேண்டும்

இந்தப் பூஜையை போல் செய்தாள் நீங்கள் உங்கள் இல்லத்தில் தெய்வங்கள் குடிகொள்ளும் மேலும் அந்த தெய்வம் உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு நவகிரக கட்டுவோம் வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு அஷ்டதிக் கட்டும் போடப்பட்டிருக்கும் அதனால் உங்கள் இல்லத்திற்கு எப்பொழுதும் எந்த ஒரு கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் போன்றவை அணுகாது அப்படி அதை மீறி யாராவது ஏவல் செய்தால் அது மீண்டும் திரும்பி செய்த வினையை தாக்கும் இந்த பூஜை முறை பழங்கால பாரம்பரிய பூஜை முறையாகும்
இந்த பூஜை செய்பவர்கள் யாருக்காவது சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்புகொள்ள நன்றி சிவாயநம

No comments:

Post a Comment