AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Saturday, 27 June 2020

சகலவித நவகிரக தோஷங்களுக்கும்

சகலவித நவகிரக தோஷங்களுக்கும் 

மந்திரம் :- ஓம் க்லீம் ஸ்ரீம் ஐம் றீம் ஹ்ரீம் ஹ்ரெளம் ஹீம் நவக்ரஹ தேவதாய சர்வ கிரஹ தோஷாம் நிவாரய நிவாரய ஸ்வாஹா"

வெள்ளித் தகட்டில் எந்திரம் எழுதி சர்வதேவதா வசிய மை தடவி சுத்த பூஜை செய்து தூப தெய்வத்துடன் மேற்கண்ட மந்திரத்தை 108 உரு ஜெபித்து தாயத்தில் போட்டு அணிய அனைத்து நவக்கிரக தோஷங்களும் சாந்தமாகி விடும் 
நவ கிரகத்துக்கு  ஒன்பது தீபம் போட சொல்லவும் நேரம் சரியில்லை புலம்புவார் செய்து பலனடையலாம் 

நன்றி 
துலாம் வெற்றிவேல் ஆம்பூர்  7010053596

Wednesday, 17 June 2020

நமது வீட்டில் தெய்வ சக்தியை நிலைநிறுத்த ஹோமம் பரிகார பூஜை முறை. பழங்காலத்து முறை



குடும்பத்தில் நிம்மதி இல்லையா
வருமானம் இல்லையா
தொழில் அமையவில்லையா
குடும்பத்தில் எப்பொழுதும் சண்டை சச்சரவு குழப்பத்தில் உள்ளீர்களா
லட்சுமி கடாட்சம் இல்லையா
கடவுள் அனுக்கிரகம் இல்லையா
குலதெய்வம் உங்கள் இல்லத்தில் இல்லையா
இவை அனைத்திற்கும் ஒரு பூஜை முறை உள்ளது ஒரு நல்ல புரோகிதர் வைத்துக்கொண்டு இந்த பூஜையை உங்கள் இல்லத்தில் செய்து அனைவரும் நலம் பெற வேண்டுகிறோம்
பூஜை முறை
மூன்று கழுதையின் கோமியத்தை பிடித்து வீட்டிற்கு வெளியே ஏதாவது ஒரு இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்

பிறகு ஏழு பசு கன்று குட்டியின் கோமியத்தை சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
பிறகு ஏழு கிணற்று நீர் சேகரித்து ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்
அத்துடன் மூன்று நதிகளின் நீர் 3 குளத்தின் நீர் மூன்று ஏரியின் நீர்
இவை அனைத்தும் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும் பிறகு
அங்கு தரமான நவரத்தினக் கற்கள் ஒன்பது கற்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும் பிறகு
108 தாமரை மலர்கள் கிடைத்தால் வாங்கிக் கொள்ளவும் இல்லையென்றால் இருபத்தி ஒரு மலர்கள் அதுவும் கிடைக்கவில்லை என்றால் ஏழு மலர்கள் கட்டாயம் வாங்க வேண்டும் மல்லிகை பூ அர்ச்சனை வாங்கிக் கொள்ளவும்

வியாழன் இரவு கழுதையின் கோமியத்தை உங்கள் வீட்டின் எல்லா இடங்களிலும் தெளிக்க வேண்டும் பிறகு வீட்டை பூட்டிவிட்டு உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டில் வந்து இரவு தங்கிக் கொள்ளவும்
மறுநாள் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது 4 மணி அளவில் எழுந்து வீட்டை நன்கு கழுவி விட வேண்டும்
பிறகு உங்கள் வீட்டில் ஹாலில் ஒரு அடி விட்டத்தில் ஒரு வட்டம் வரைந்து அங்கு ஒரு அடி ஆழம் அளவிற்கு ஒரு பள்ளம் எடுக்கவும் அந்த பள்ளத்தை சுற்றி அறுகோண வடிவில் ஒரு ஹோம குண்டம் தயார் செய்யவும்
நவகிரகங்களுக்கு உண்டான நவ தானியங்களும் நவபாஷாணங்கள் மற்றும் நவகிரக சமித்துக்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும்

ஒரு புதிய சில்வர் கூடத்தில் நீங்கள் சேகரித்து வைத்த அனைத்து நீர்களும் அதில் சேர்க்கவும் அத்துடன் வாசனை பொடிகளும் 8 எலுமிச்சை பழங்களும் சேர்த்தது கலசம் தயார் செய்யவும் பிறகு உங்கள் பூஜை அறையில் ஒன்பது கிரகங்கள் இருக்கும் இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் அந்தந்த கிரகத்திற்கு உண்டான கற்களை தேன்மெழுகு விட்டு மூடவும் பிறகு தயார் செய்த கலசத்தை பூஜை அறையில் வைத்து கலசத்தில் இருந்து நூல் மூலம் நீங்கள் தயார் செய்த ஹோம குண்டத்தை சுற்றவும்
பிறகு வீட்டில் கணபதி பூஜை அடுத்து லட்சுமி பூஜை அடுத்து நவக்கிரக பூஜை ஹோமம் வளர்த்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்
அந்த கலசத்தில் உள்ள நீரை மூன்று நாட்களுக்கு பிறகு எடுத்து வீட்டில் உள்ள அனைவரும் சிறிது சிறிது பருகி மீதமுள்ள நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்

ஹோம குண்டம் வளர்த இடத்தில் அந்த சாம்பலை அதே குழியில் போட்டு மூடிவிடவேண்டும்
ஓமம் வளர்த்து முடித்த அந்த நாளில் இருந்து தொடர்ந்து 21 நாட்கள் வீட்டில் விளக்கு அணையாமல் எரிய விட வேண்டும்
கலசத்தில் உள்ள 8 எலுமிச்சை கனிகளும் வீட்டின் எட்டு திசையிலும் புதைக்க வேண்டும் இந்த இடங்களில் மலர்கள் தூவி ஒரு மண் குடுவையில் எலுமிச்சம் கனியை வைத்து அந்த திசைக்கு உண்டான தேவதையை வணங்கி எலுமிச்சை கனியை புதைக்க வேண்டும்

இந்த 21 நாட்களும் உடலுறவு மற்றும் தீட்டாகி விடுதல் மற்றும் இறுதி அஞ்சலிக்கு செல்லுதல் போன்றவை கூடாது 21 நாட்களும் கட்டுப்பாடுடன் கடவுளை வணங்கி வரவேண்டும்

இந்தப் பூஜையை போல் செய்தாள் நீங்கள் உங்கள் இல்லத்தில் தெய்வங்கள் குடிகொள்ளும் மேலும் அந்த தெய்வம் உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு நவகிரக கட்டுவோம் வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு அஷ்டதிக் கட்டும் போடப்பட்டிருக்கும் அதனால் உங்கள் இல்லத்திற்கு எப்பொழுதும் எந்த ஒரு கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் போன்றவை அணுகாது அப்படி அதை மீறி யாராவது ஏவல் செய்தால் அது மீண்டும் திரும்பி செய்த வினையை தாக்கும் இந்த பூஜை முறை பழங்கால பாரம்பரிய பூஜை முறையாகும்
இந்த பூஜை செய்பவர்கள் யாருக்காவது சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்புகொள்ள நன்றி சிவாயநம

புது கணக்கு போட

திங்கள் புதன் வியாழன் ஆகிய நாட்கள் நல்லது
துவிதியை திருதியை பஞ்சமி சஷ்டி சப்தமி தசமி ஏகாதசி துவாதசி திரயோதசி ஆகிய திதிகள் நல்லது
அஸ்வினி ரோகிணி மிருகசீர்ஷம் திருவாதிரை புனர்பூசம் பூசம் உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் சுபம்
ரிஷபம் மிதுனம் சிம்மம் துலாம் மீனம் ஆகிய லக்னம் ஏற்றது

மேற்சொன்ன கிழமை திதி நட்சத்திரம் லக்னம் இவை நான்கும் ஒரே நாளில் வந்தால் அவை மிக மிக உத்தமம்

பூணூல் அணிய

யஜூர் வேதத்தை பின்பற்றுவோர் ஆவணியில் பௌர்ணமியிலும்
ரிக் வேதத்தை பின்பற்றுவோர் விநாயகர் சதுர்த்தியும் அஸ்தம் நட்சத்திரத்தில் பூணூல் அணிய லாம்.

மருந்து உண்ண

ஒரு வியாதிக்கு முதன்முதலில் மருந்து உன்ன செவ்வாய்க் கிழமையும் சனிக்கிழமையும் ஆகாது இந்த இரண்டு நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் மருந்து உண்டால் உடனடியாக நோய் குணமாகும்

மந்திர விபூதி செய் முறை

5 வரட்டி ஆகும் அளவிற்கு பசும் சாணத்தில் ஒருபிடி வில்வ இலை ஒரு பிடி கண்டங்கத்திரி இலை ஒரு பிடி தும்பை இலை ஒரு பிடி கருஊமத்த இலை மேலும் ஒரு பிடி கொன்றைமலர் இருந்தால் சேர்த்துக் கொள்ளவும் மேலும் கற்பூர வில்வம் மற்றும் மகாவில்வம் இருந்தால் சேர்த்துக்கொள்ளவும் மேலும் ஒரு பிடி சுத்தமான ஆல இலை சுத்தமான அரச இல்லை சேர்த்துக்கொள்ளவும் இத்துடன் ஒரு பிடி அளவிற்கு தர்ப்பைப்புல் சேர்த்து பசும் சாணத்தில் கலந்து வரட்டி தட்டவும் ஐந்து நாட்கள் நன்றாக வெயிலில் காய வைத்து புது சட்டி வாங்கி  அதில் அனைத்தும் போட்டு எரிய விட்டு சுத்தமான சாம்பலை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் அத்துடன் கீழ் உள்ள பொருட்கள் சேர்க்கவும்

ஜவ்வாது 5 கிராம்
பச்சைக் கற்பூரம் 5 கிராம்
குங்குமப்பூ ஒரு கிராம்
ஏலக்காய்-2
கிராம்பு 2
ஜாதிபத்திரி 5 கிராம்
நவபாஷாணம் அனைத்தும் சேர்த்து 1 கிராம்
ஒரிஜினல் புனுகு ஒரு கிராம்
ஒரிஜினல் அம்பர் ஒரு கிராம்
ஒரிஜினல் கோரோசனை ஒரு கிராம்
ஒரிஜினல் கஸ்தூரி ஒரு கிராம்
சுத்தமான அர்த்தர் 5ml
சுத்தமான பன்னீர் 150 ml

5 கிராம் அளவிற்கு கொஞ்சம் பஞ்சகவியம் இவை அனைத்தும் பொடிசெய்து சாம்பலுடன் கலந்து நன்றாக காய வைக்க வேண்டும் பிறகு ஒரு மெல்லிய காட்டன் துணியில் கொட்டி ஜலிக்க வேண்டும் ஜொலித்து வரும் சுத்தமான விபூதியை புதிதாக ஒரு வெள்ளை மெல்லிய காட்டன் துணியில் இந்த விபூதியை கொட்டி ஏதாவது ஒரு பழைய சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள சிவலிங்கத்திற்கு நாம் கொண்டு செல்லும் துணி பையுடன் விபூதியை லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும் அப்படி செய்து சேகரித்த புனிதமான அந்த விபூதியை ஒரு வில்வ குடுவிலோ அல்லது செம்பு பாத்திரத்திலோ சேகரித்து கீழ்வரும் மந்திரத்தை 10 ஆயிரத்து எட்டு தடவை ஜெபிக்க வேண்டும் மந்திரம் ஜெபிக்கும் பொழுது இந்த விபூதியை நம் கையில் வைத்துக் கொண்டு வடக்கு முகமாக அமர்ந்து மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்
ஓம்  ஸ்ரீம் க்ரீம் ஹ்ரீம் க்லீம்  க்லௌம்  நமசிவய- யநமசிவ-வயநமசி-சிவயநம-மசிவயன எனக்கு அனைத்தும் வசி   வசி சிவ சிவ ஸ்வாக 

இந்த மந்திரத்தை ஒருமுகமாக 10008 தடவை ஜெபித்து பிறகு விபூதியை நாம் தினமும் வைத்துக்கொண்டு சென்றாள் நாம் நினைக்கும் அத்தனை விஷயங்களும் நடக்கும் காரியசித்தி 100% நடக்கும் மேலும் சிவனின் அருள் ஆசி பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் நன்றி சிவாய நம


குழந்தை வேண்டி கடலில் நீராடுதல்

செவ்வாய் வெள்ளி சனிக் கிழமை கடலில் நீராடக் கூடாது அமாவாசை பவுர்ணமி மாதப்பிறப்பு கூடாது.