கோரக்கர் அருளிய அனுமனின் மூலமந்திரம். அனுமாரின் பெருமையை முழுமையாக உணர்ந்தவர்கள், அவரையன்றி வேறொருவரை வணங்கிட மாட்டார்கள். அத்தனை சிறப்புகளைக் கொண்ட அனுமனைப் பற்றி சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் உயர்வாய் குறிப்பிட்டிருக்கின்றனர். அனுமனை உபாசனை செய்து சித்தர்கள் விண்ணில் பறந்தார்கள். சிரஞ்சிவித்வம் (மரணமில்லா வாழ்வு) பெற்ற அனுமாரின் மந்திரத்தையும் செபம் செய்பவர்களுக்கு அனேகவிதமான சித்துக்கள் கிட்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
அகத்தியர், யூகிமுனி, கொங்கணர், கோரக்கர் போன்ற சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களின் ஊடே அனுமனைப் பற்றிய பல தகவல்களை மறைத்துக் கூறியுள்ளனர்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த அனுமனின் மூல மந்திரத்தினை, இந்த நாளில் பகிர்வது மிகவும் பொருத்தமாயிருக்கும் என கருதுகிறேன். இந்த மூல மந்திரம் கோரக்கர் அருளிய "நமனாசத் திறவுகோல்" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
அண்டிடுவாய் அனுமாரின் மூலமந்திரம்
ஆதார அனவரத ஓம். ரா. ஜ. மூர்த்த
விண்டுணு வாய்வு புத்திரா. ஹா. ரீம். அனுமந்தாய
வீக்ஷண்ய பக்ஷ ராஜசிரஞ்சீவி வாமஸ்யா
கண்டு ஸ்ரீம். உமாபதிங். உங். ருங். லுங் சுங்
ஆம். அம். உம். லா. லீ லூ. லே. லம். ஸம்
பண்டு மம. ஜீவ. ரெக்ஷ தரத் மான்மியம்
தேவ். மாவ் பாத தெரிசய அனுமந்த சரணாய நமஸ்து.
அனுமார் மூல மந்திரம்..
ஓம் ராஜ மூர்த்த வாயுபுத்ரா. ஹா. ரீம்
அனுமந்தாயா. வீக்ஷண்ய பக்ஷராஜா
சிரஞ்சீவி வாமஸ்யா ஸ்ரீம் உமாபதிஸ்
உங். ருங். லுங். சுங். ஆம். அம். உம்.
லா. லீ. லூ. லே. லம். ஸம். மம. ஜீவ ரெக்ஷதரத் மான்மியம்
தேவ். மாவ் பாததெரிசய. அனுமந்த சரணாய நமஸ்து
இந்த மூல மந்திரத்தை தினமும் செபித்து வர நலமும், வளமும் நிறையும்.
அகத்தியர் ஞானம்
No comments:
Post a Comment