அசாத்ய சாதக ஸ்வாமிந் |
அசாத்யம் தவகிம்வத |
ராம தூத க்ருபாசிந்தோ |
மத் கார்யம் சாதய ப்ரபோ|
எந்த ஒரு காரியம் துவங்கும் முன்பும் இந்த ஸ்லோகத்தை மூன்று தடவை கூறி ஆஞ்சநேயரை வணங்கி வேண்டிய பின்னர் துவங்க சிறப்பாக முடியும்.
ஏற்கனவே துவங்கிய வேலை பாதியில் முடிவடையாமல் நின்றால் செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீ ஹனுமன் ஆலயம் சென்று அவருக்கு வெற்றிலை மாலை சாற்றி அமர்ந்து இந்த ஸ்லோகத்தை 27 தடவை ஜெபித்து வேண்டிக்கொள்ள தடைபட்ட காரியம் விரைவில் முடியும் சூழல் உருவாகும்.
2.வியாதிகள்,எதிரிகள் நீங்க ,வசீகரம் தரும் மந்திரம்
ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
சர்வ சத்ரு சம்ஹாரணாய சர்வ ரோக ஹராய |
சர்வ வசீகரணாய ராமதூதாய ஸ்வாஹா ||
3.எல்லா ஆபத்துக்களில் இருந்தும் விடுபட :-
ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |ஆத்யாத்மிகாதி தெய்வீகாதி
பௌதீக தாபத்ரய நிவாரணாய| ராமதூதாய ஸ்வாஹா ||
உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத் தேர்ந்தெடுத்து 108 தடவை இம்மந்திரம் ஜெபித்து கையில் ரக்ஷை கட்டிக்கொள்ள மனிதர்களாலும், இயற்கை மற்றும் துஷ்ட சக்திகளாலும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது சர்வரக்ஷையாக விளங்கிக் காக்கும்.ரக்ஷையை அணியும் முன் மேற்சொன்ன மந்திரம் 3 தடவை ஜெபித்து அர்ச்சித்து பின் அணிந்து கொள்ளவும்.
ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
பர யந்திர மந்திர தந்திர த்ராடக நாசகாய |
சர்வஜ்வர சேதகாய சர்வ வியாதி நிக்ருந்தகாய |
சர்வ பய ப்ரசமனாய சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய |
சர்வகார்ய சித்திப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா ||
மேற்சொன்ன பலன்கள் போக மேலும் சில காரியங்களுக்கும் இம்மந்திரம் பயன்படும்.எதிர்களுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இடது கையில் ஒரு செம்பில் நீர் வைத்துக் கொண்டு இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வெற்றி கிட்டும்.
5.கெட்ட சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்க :-
ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச|
டாகினி சாகினி துஷ்ட க்ரஹ பந்தனாய ராமதூதாய ஸ்வாஹா ||
அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் இருந்தால் இம்மந்திரத்தை மனதுக்குள் ஜெபிக்க அவை உடனே நீங்கும்.உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத் தேர்ந்தெடுத்து ஒரு நல்ல வெற்றிலையில் செந்தூரம் கொண்டு "ஹ்ராம்" என்று எழுதி இம்மந்திரத்தை 1008 உரு ஜெபித்து அந்த வெற்றிலையைச் சுருட்டித் தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் அணிந்து கொள்ள பூத,ப்ரேத,பிசாசு,துர்சக்திகளின் பாதிப்புகள் நிரந்தரமாக நீங்கும்.
தனி நபருக்கு இல்லாமல் ஒரு வீடு,கடை,தொழிற்சாலை போன்றவற்றுக்கு துஷ்ட சக்திகளால் பாதிப்பு என்றால் மேற்கண்ட வெற்றிலையை ஒரு சிகப்புத் துணியில் முடிந்து வீடு,கடை,தொழிற்சாலை வாசலில் கட்டி வைக்கவும்.
No comments:
Post a Comment