பகவதியம்மன்
பகவதி மந்திரம்
பாரப்பா இன்னமொரு தீச்சைமார்க்கம்
பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
நேரப்பா பகவதியாள் தியானந்தன்னை
நேர்மையுடன் சொல்லுகிறே நிசமதாக
சாரப்பா தன்சார்பு நிலையில்நின்று
சங்கையுடன் ஓம் றீங் அங்கென்றேதான்
காரப்பா புருவ நடுக்கமலத்தேகி
கருணையுடணாயிரத்தெட்டுருவே செய்யே.
செய்யடா மானதமாயுருவே செய்யத்
திருயுருவாய் நின்றபகவதியாள்தானும்
மெய்யடா உனதிடமாய் நிருத்தஞ்செய்வாள்
பண்ணப்பா இதுசமயமென்று நீயும்
பகவதியாள் விபூதியை நீதரித்துக்கொள்ளே.
கொள்ளடா விபூதியை நீதரித்துக்கொண்டு
குணமாகப் பகவதியைத்தியானம் பண்ணி
நில்லடா உன்முகங்கண்டோருக்கெல்லாம்
நீங்காத பாவமெல்லாம் நீங்கிப்போகும்
சொல்லடா உன்வசனம் நன்மையாகும்
சோதிதிருப்பகவதியாள் சுருக்கினாலே
அல்லடா உன்மனதை நோகப்பண்ணும்
அவர்கள்குடி செந்தீயிலழுந்துப்பாரே.
-அகத்தியர் பரிபூரணம்1200
பொருள்:
பகவதியின் தியானத்தை சொல்கிறேன் கேள்,
மனஓர்நிலையோடு புருவமையத்தில் மனதை குவித்து'ஓம் ரீங் அங்" என்று
1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.இம்மந்திரதை சித்தி செய்தவரின் உள்ளத்தில் பகவதி இருந்து இவர்கள் செய்யும்
சகல காரியங்களும் இவர்களுக்கு சித்தியாகும்படிசெய்வாள். விபூதியை பூசிகொண்டு இம்மந்திரத்தை தியானம் பண்ணி
செல்ல உன் முகம் பார்க்கும் யாவரின் பாவங்களும் விலகிவிடும். நீ சொல்வதெல்லாம் பலிக்கும். உனது சகலபாவங்களும் விலகிவிடும்.
உன் மனதை எவனாவது நோகடித்தால் அவன் குடும்பம் அழிந்துபோய்விடும் என்கிறார் அகத்தியர்.
மேலும் அகத்தியர் தனது வாதசௌமியம் என்னும் நூலிலும்
இம்மந்திரத்தை பற்றி சொல்லிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இம்மந்திரத்தினால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை.
சகலமும் சித்தியாகும்.செல்வம் பொழியும்.
எடுத்த காரியமெல்லாம் ஜெயமாகும். நினைத்தபடி முடியும்.
ஆபத்து வராது, வல்வினைகள் அகன்றுவிடும். இம்மந்திரம்
கோடானகோடி பூசைசெய்ததற்கு ஒப்பாகும் என்று
வாதசௌமியத்தில் கூறியுள்ளார் அகத்தியர்.
No comments:
Post a Comment