AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Monday 15 February 2016

Rudraksha benefits and Rudraksha by natchathiram

ருத்ராக்ஷம்...

இதை பற்றி நிறைய பதிவுகள் இங்கு வந்து உள்ளன அன்பர்கள் தேவைக்கு எளிமையாக சில தகவல் மட்டும் ...

அக்க்ஷம் என்றால் கண்கள் என்று ஒரு பொருள் உண்டு  .ருத்ராக்ஷம். என்றால் சிவனின் கண்கள் என்று சொல்லலாம் .

மனிதர்களுக்கு உடலில் உள்ள உறுப்புகள்  வித விதமாக அமையலாம் ஆனால் கண்கள் எல்லோருக்கும் ஒன்று போல் தான் அளவு மேலும் 2 கண்கள் தான் உண்டு .

இதுவே ஒளியை கொண்டு வழிகாட்டுதல் என்னும் செயலை செய்கிறது .
2 கண்கள் இருந்தாலும் ஒரு பொருளை பார்க்கும் பொழுது இரண்டும்
ஒன்று போலத்தான் பார்க்கும் .
உடலில் கண்பார்வை இல்லை என்ற நிலை வந்தால் இதை விட மிக பெரிய தண்டனை கிடையாது .
இப்படி உள்ள கண்கள் சிவ பெருமானுக்கு   ,வலது, இடது மற்றும் அக்னி என்னும் புருவ மத்தியில் ஒன்று .
இந்த கண்ணை ஞான கண் என்றும் ,சுடர்விழி என்றும் சொல்லலாம் .

இந்த கண் தான்  மண் மீது விழுந்து தாவரமாக முளைத்து ருத்ராக்ஷம் என்று பெயர் கொண்டு  கனிகளை முதலில் தோற்று வித்து பிறகு காய்களாக உருமாரி உதிர்ந்து மண்ணில் விழுகிறது .
இதில்  பல வகைகள் உண்டு .

இந்த மணிகளின் தன்மைகளை புரிந்து கொள்வோம் .
எந்த மாதிரியான வெப்பம் /குளிர் என்றாலும் தாங்கும் சக்தி படைத்தவைகள் இந்த மணிகள் .
மனிதனின் உடலில் இவைகள் அணியப்பட்டு இருக்கும் பொழுது உடலில் உள்ள வெப்பத்தை சரி செய்யும் .
கழுத்தில் கட்டப்பட்டு இருக்கும் பொழுது ஜடார்அக்னியை
சமம் படுத்தி நன்மை செய்யும் .
மேலும் கழுத்தில் இருக்கும் பொழுது அதுனுடன் சேர்த்து நாம் சுவாசம்
செய்வோம் இப்படி உள்ளே போகும் பிராணன் ரத்தத்துடன் கலந்து நன்மை செய்யும் .இப்படி கொஞ்சம் கொஞ்சம்மாக ஒரு விகிதத்துடன்
உடலில் கலந்து ஒரு பாதுகாப்பு ஏற்படுத்தும் .

நாம் குளிக்கும் பொழுது நீரில் கலந்து   மேல் தோலின் வழியாக உள்ளே சென்று கொண்டு இருக்கும் இதுவும் ஒரு வகையில் உடலுக்கு வெளியில்
ஒரு பாதுகாப்பு தரும் .

இப்படி பல நன்மைகள் செய்யும் இந்த மணிகள் பல வகை உண்டு ..

இதை எந்த  எந்த நட்சத்திரம் உள்ள நபர்கள் எதை அணிய வேண்டும் என்று பார்ப்போம் ...
...

1. அஸ்வினி – ஒன்பது முகம்.
2. பரணி – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
3. கார்த்திகை – பனிரெண்டு முகம்.
4. ரோஹிணி – இரண்டு முகம்.
5. மிருகசீரிஷம் – மூன்று முகம்.
6. திருவாதிரை – எட்டு முகம்.
7. புனர்பூசம் – ஐந்து முகம்.
8. பூசம் – ஏழு முகம்.
9. ஆயில்யம் – நான்கு முகம்.
10. மகம் – ஒன்பது முகம்.
11. பூரம் – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
12. உத்திரம் – பனிரெண்டு முகம்
13. ஹஸ்தம் – இரண்டு முகம்.
14. சித்திரை – மூன்று முகம்.
15. ஸ்வாதி – எட்டு முகம்.
16. விசாகம் – ஐந்து முகம்.
17. அனுஷம் – ஏழு முகம்.
18. கேட்டை – நான்கு முகம்.
19. மூலம் – ஒன்பது முகம்.
20. பூராடம் – ஆறுமுகம். பதிமூன்று முகம்.
21. உத்திராடம் – பனிரெண்டு முகம்.
22. திருவோணம் – இரண்டு முகம்.
23. அவிட்டம் – மூன்று முகம்.
24. சதயம் – எட்டு முகம்.
25. பூரட்டாதி – ஐந்து முகம்.
26. உத்திரட்டாதி – ஏழு முகம்.
27. ரேவதி – நான்கு முகம்.

No comments:

Post a Comment