AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Saturday 24 December 2016

வாசி

கேள்வி 
வாசி யோகத்தில் ; இரண்டு நாசி சுவாசம் , இடது நாசி சுவாசம் வலது நாசி சுவாசம் ,  ஒருநாசியில் உள்வாங்கி மறுநாசியில் வெளியிடல்  ஆகியவை ஏன் செய்ய வேண்டும் ?
 நாடி சுத்தி 
, பிராணாயாமம் வாசி யோகம் , வித்தியாசம் என்ன . ?
பதில் 
நாடிகள் என்பது சக்தி ஓட்ட பாதைகள்.  நமது உடலில்  72000  நாடிகள் செயல் படுகிண்றன. 

இவை பத்து பிரதான நாடிகள் மூலம் கட்டு படுத்த படுகின்றன .. இந்த பத்து நாடிகளை மூன்று அதி  முக்கிய நாடிகள் கட்டுபடுத்துகின்றன .  அவை இடகலை பிங்கலை சுழிமுனை அல்லது குரு நாடி. அவற்றுள் சுழிமுனை நாடியை வாசி யோகம் மூலம் நாம் உருவாக்குகிறோம் . 

இடகலை பிங்கலை  ஆகிய நாடிகள்  நமது இடது நாசி  மற்றும் வலது நாசி துவாரம் வழி  இடதுபக்க செயல்பாடு வலது பக்க செயல் பாடு என  பிரித்து செயல்படுகின்றன .. ஆயினும்   இடகலை என்ற சந்ரகலை 16  நாத கலை சக்தி கொண்டது .   பிங்கலை என்ற  சூரிய நாடி 12 விந்து கலை சக்தி கொண்டது .இதனால் நாத உயிர்சக்தி (positive life energy) மற்றும் விந்து உயிர் சக்தி ( negative life energy )  சமநிலை அடையவில்லை.இதற்காக சுழிமுனை என்ற நாடியை வாசி யோகத்தில் உருவாக்குகிறோம் . இதில் தாரக கலை என்ற கலை சக்தி  (கிடைக்கும் )பெறும் பலம் கொண்டது . . இதனால் இடகலை பிங்கலை சமநிலை பெற்று உடல் இளமையுடன்  அழியாமல்  இருக்கும் .இந்த பிரபன்ச்சத்தில் இருந்து 32 கலை  பெறப்படுகிறது .  இந்த உயிர் சக்தி நமது உடல் முழுவதும் பரவி உடலில் உருவாகும் 64 கலை சக்தியுடன் சேர்ந்து 96 கலை சக்தி உருவாக்கும் . இது அளப்பறி சக்தி . நிலை . இதுவே அணைத்து அபூர்வ சக்திகளுக்கும்  சித்திகளுக்கும் அடிப்படை .. 
.  
சாதரணமாக நாம் இரண்டு நாசியில் சுவாசிக்கிறோம் 
அப்பொழுது நாத கலை !விந்து கலை 12 என்ற வித்தியாசத்தால் 4  கலை வீணாகிறது  இதை சமநிலை படுத்த ஒருநாசியில் சுவாசம் அடைபட்டு நிகழும் .அப்பொழுது குறைவான சக்தியே பெறப்படும் . உயர்ந்த சக்தி பெற வாசி யோகா ஆரம்பத்தில் மூச்சை நெறிப்படுத்த துவங்குகிறோம் . முதலில் காலத்தை நெறிபடுத்தி இரண்டு நாசியிலும் சுவாசித்து  வாசி உருவாக்குகிறோம்இவ்விதம் .வாசிபழகுதல்  துயர் தராது 

அதன் பின் நாடிகளை நெறிபடுத்தி வாசியோகம் பழக வேண்டும்.அதற்க்கு 

  • முதலில் இரண்டு நாசியிலும் சுவாசித்து வாசிபழகுதல் வேண்டும்.
  • அதன்  பிறகு வலது நாசியில் யில் வாசி பழக வேண்டும் 
  • அதன்பின் இடது நாசியில் வாசி பழக வேண்டும்  . 
இவை நாடிசுத்தி எனப்படும் .
  • அதன் பின்  வலது நாசியில்  உள்வாங்கி கும்பித்து  இடது வெளியிடல்  
  • அதன் பின்  இடது நாசியில்  உள்வாங்கி கும்பித்து   வலது வெளியிடல்  என வாசி பழகவேண்டும் .
  
இது பிராணயாமம்

 
இப்படி  படிப்படியாக நாசியை பயன்படுத்தி வாசி யோகம்  பழக வேண்டும் .
 அதன் பின் ஆதாரதளங்களில் பிராணாயாமம் செய்வது வாசியோகம் 
பழக வேண்டும்   .

 
இதனால்  பிரபன்ச்சத்தில் பெறும் நாத மற்றும் விந்து சக்திகள் உடலில் நாத விந்து சக்திகளை உருவாக்கி . உடலில் சக்தி சம நிலை உருவாக்கும் . இவிதம்  படிப்படியாக நாடிகளை நெறிப்படுத்தி சக்தி சமநிலை பெறுவதால் மனம் அமைதிஆகி ஒருநிலைப்படும். உடல் உறுதி பெறும் 
.

இப்படி படிப்படியாக வாசி பழகாவிட்டால்  சக்தி சமநிலை கெடும் . 
மூச்சுப்பிடிப்பு மற்றும் துன்பங்கள் வரும் .  

இவ்விதம் படிப்படியாக வாசி பழகுவதால்  உடல் முழுவதும் சக்தி ஓட்டபாதை சீராகும் . அனைத்து அவயவங்களும் சக்தி பெரும் . இதனால் நோய்கள் தீரும். துன்பம் நேராமல் சக்தி பெறுகிறோம் .

No comments:

Post a Comment